நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்
சென்னை 136வது வட்டத்தில்
திமுக சார்பில் போட்டியிட்ட நிலவரசு துரைராஜ் வெற்றிபெற்றுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ம் தேதி நடைபெற்ற நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பல இடங்களில் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. 21 மாநகராட்சியையும் திமுக வசம் செல்லவுள்ளதையே வாக்கு எண்ணிக்கை முடிவுகள் காட்டுகின்றன.
சென்னையில் இந்த முறை உள்ளாட்சித் தேர்தலில் குறைந்த அளவே வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையில்பல இடங்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்று வருகின்றனர். அந்த வகையில், கோடம்பாக்கம் 136வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட 22 வயதே ஆன நிலவரசு துரைராஜ் வெற்றி பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த அறிவுச்செல்வி 5,112 வாக்குகளும் பெற்றுள்ளார். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வேட்பாளர் லட்சுமி கோவிந்தசாமி 1137 வாக்குகள் மட்டுமே பெற்றார். விஜய் மக்கள் இயக்க வேட்பாளரை விட அதிமுக வேட்பாளர் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க: ஒரு வாக்குக் கூட பெறாத மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்
பி.காம் படித்துள்ள நிலவரசி துரைராஜின் தந்தையும் திமுகவை சேர்ந்தவர்தான். திமுக இளைஞரணி தலைவரும் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தான் தனது அரசியல் ரோல்மாடல் என்று நிலவரசு துரைராஜ் முன்னரே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.