நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் வார்டுக்கு தொடர்பில்லாத வெளியாட்கள் இன்று மாலைக்குள் வெளியேற வேண்டும் என்றும்,
தேர்தல் விதிமீறல்களை 90 பறக்கும் படை வாகனங்கள் மூலம் காண்காணிக்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில், கூடுதல் பறக்கும் படை வாகனங்களை சென்னை மாநகராட்சி ஆணையார் ககன் தீப் சிங் பேடி, சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, 19ஆம் தேதி நடைபெற தேர்தலால் இன்றுடன் பிரச்சாரம் முடிய இருக்கிறது.
தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க ஏற்கனவே 45 பறக்கும் படையினர் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் இன்று கூடுதலாக 45 பறக்கும் படையினர் அமைக்கப்பட்டு, மொத்தம் 90 குழுக்கள் ரோந்து பணியில் ஈடுபடுவர்கள். இன்று இரவு மற்றும் நாளை காலை தவறுகள் நடக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. இன்று நள்ளிரவு மற்றும் அதிகாலையில் பறக்கும் படை மூலம் தீவிரமாக கண்காணிக்கப்படும்.
பறக்கும் படையினர் 24 மணி நேரமும் கண்கானிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் செய்தித்தாள், பால் விநியோகம் செய்யப்படும் நேரங்களில் தீவிரமாக கண்காணிக்கப்படும்.
தேர்தல் குறித்த புகார்களை 1800 4250 7012 என்ற எண் மூலம் தெரிவிக்கலாம். இன்று முதல் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட உள்ளது. போஸ்டர்கள், ஸ்டிக்கர்கள் ஒட்ட அனுமதி இல்லை என்றும் 21 ஆயிரம் சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளது. விதி மீறி சுவரொட்டிகள் ஒட்டினால் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை வேட்பாளர்களின் தேர்தல் செலவில் சேர்க்கப்படும் என்றும் எச்சரித்தார்.
Read More : பாஜகவிற்கு ஓட்டு போடாவிட்டால் பாவம் வரும் - ஹெச்.ராஜா சாபம்
நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் வார்டுக்கு தொடர்பில்லாத வெளியாட்கள் இன்று மாலைக்குள் வெளியேற வேண்டும் என்றும், சென்னையில் தேர்தல் பணிக்காக 18,000 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். வாக்குச்சாவடியில் 1121 இடங்களில் சிசிடிவி நேரலை இணைப்பில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். தேர்தல் விதிமுறைகளை மிறியதாக இதுவரை 69 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
Must Read : பிராமணர் கூட்டு இல்லாமல், திமுகவுக்கு அரசியலே இல்ல - நடிகை கஸ்தூரி விமர்சனம்
மேலும், சென்னையில் 27 ஆயிரம் தேர்தல் அலுவலர்கள் பணியில் உள்ளனர் என்று கூறிய சென்னை மாநகராட்சி ஆணையர், 1121 நேரடியாக Live streaming கண்காணித்து வருகிறோம். என்றும், 27 நபர்கள் ஈவிஎம் இயந்திரத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் சரி செய்ய தயார் நிலையில் உள்ளனர் எனவும் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.