Home /News /tamil-nadu /

எதிர்க்கட்சி மாதிரி பேசறீங்க.. கம்யூனிஸ்ட் கவுன்சிலர் உடன் திமுக கவுன்சிலர்கள் வாதம்

எதிர்க்கட்சி மாதிரி பேசறீங்க.. கம்யூனிஸ்ட் கவுன்சிலர் உடன் திமுக கவுன்சிலர்கள் வாதம்

சென்னை மாநகராட்சி பட்ஜெட்

சென்னை மாநகராட்சி பட்ஜெட்

14 வது மண்டல குழு தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர் ரேணுகாவின் பேச்சை இடைமறித்து, எதிர்கட்சி போல் பேசாதீங்க, கோரிக்கையை மட்டும் பேசுங்க என்று  கூறினர்.

தமிழக அரசு, உள்ளாட்சி மன்றங்களின் அதிகாரத்தை மீறி சொத்து வரியை உயர்த்தியுள்ளதாக மன்றக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய இந்திய கம்யூனிஸ்ட் பெண் உறுப்பினர் குற்றஞ்சாட்டினார். அதற்கு ‘எதிர்க்கட்சி மாதிரி பேசறீங்க’என கூச்சலிட்டு கோரிக்கையை மட்டும் கூறுமாறு திமுக உறுப்பினர்கள் வாதம் செய்தனர்.

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மேயர் பிரியா ராஜன் இதனை தாக்கல் செய்தார். பட்ஜெட் விவாதத்தில் உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர். அப்போது,  42 வார்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ரேணுகா பேசும்போது,
"மாநகராட்சி நிதி நிலை அறிக்கையின் மீது உறுப்பினர்களுக்கு அவகாசம் கொடுக்காமல் உடனே விவாதம் நடத்துவது ஏற்புபைடையதல்ல. உறுப்பினர்களின் விவாதம் சம்பிரதாயமாக இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

இன்றைய நிதிநிலை அறிக்கை மூலம் மாநகராட்சிக்கு ரு. 788 கோடி வருவாய் பற்றாக்குறையாக உள்ளது  தெரியவருகிறது.  மாநகராட்சியின்  கடன் விவரம் நிதி நிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. இதன் மூலம்  மாநகராட்சி நிதி நெருங்கடியில் இருப்பது தெரிய வருகிறது. மக்களிடம் அதிக வரிமூலம் வருவாய் ஈட்டுவது சரியல்ல.

சொத்து வரி வசூலித்தல் உள்ளாட்சி அமைப்பின் அதிகாரத்தில் வருவது. உள்ளாட்சி மன்றங்களின் சம்பந்தமின்றி மாநில அரசு சொத்து வரியை உயர்த்தி அரசாணை நிறைவேற்றியது உள்ளாட்சி மன்றங்களின்  அதிகாரத்தை மீறும் செயல் என்று பேசினார். அப்போது,  14 வது மண்டல குழு தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள், உறுப்பினர் ரேணுகாவின் பேச்சை இடைமறித்து, எதிர்கட்சி போல் பேசாதீங்க, கோரிக்கையை மட்டும் பேசுங்க என்று  கூறினர். இதையடுத்து உறுப்பினர் ரேணுகா தனது கோரிக்கைகளை கூறினார் .

இதையும் படிங்க: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் இடம்பிடித்த முக்கிய அம்சங்கள் என்னென்ன?


மேலும் உறுப்பினர் ரேணுகா பேசி முடித்த பின்னர், அடுத்த நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் 2 நாட்கள் நடைபெறும் என துணை மேயர் மகேஷ்குமார் தெரிவித்தார்.
Published by:Murugesh M
First published:

Tags: Chennai corporation

அடுத்த செய்தி