முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தேர்தலுக்கு முன் அவசர அவசரமாக போடப்பட்ட 660 ஒப்பந்தங்கள் அதிரடி ரத்து!

தேர்தலுக்கு முன் அவசர அவசரமாக போடப்பட்ட 660 ஒப்பந்தங்கள் அதிரடி ரத்து!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சாலைகளை சீரமைக்க ஒப்பந்தங்கள் போடப்பட்ட நிலையில், அந்த சாலைகளை பொறியாளர் அடங்கிய குழு நேரில் சென்று பார்வையிட்டது. அப்போது, சாலை நல்ல முறையில் இருப்பதும் தற்போது சீரமைக்க தேவையில்லை என்பதும் தெரியவந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களில் முன் அவசரமாக இறுதி செய்யப்பட்ட 660 நகர சாலை ஒப்பந்தங்களை ரத்து செய்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் அவசரகத்தியில் சென்னையில் உள்ள பெருங்குடி , வளசரவாக்கம் சோழிங்கநல்லூர் , அண்ணாநகர் உள்ளிட்ட மண்டலங்களில் உள்ள 3200 சாலைகளை சீரமைக்க சுமார் 43 கோடி மதிப்பீட்டில் 660 ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் புதிதாக சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக ககன் தீப் சிங் பேடி பொறுப்பெற்ற பின்னர் இந்த ஒப்பந்தங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 3200 சாலைகளை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு பொறியாளர் அடங்கிய குழுவுக்கு அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க: சார்பட்டா சொல்லும் அரசியல் என்ன? திமுக, அதிமுக வாதம்!

அந்த குழு அளித்த அறிக்கையின் படி மேற்குறிப்பிட்ட 3200 சாலைகளும் நல்ல நிலையில் இருப்பதாகவும் , அவற்றை சீரமைப்பதற்கான தேவை தற்போது இல்லை எனவும் தெரியவந்தது. இதன் தொடர்சியாக, போடப்பட்ட 660 ஒப்பந்தங்களை உடனடியாக ரத்து செய்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் படிக்க: சார்பட்டா திமுகவின் பிரச்சாரப் படம்: ஜெயக்குமார்!

மேலும் அவசர கதியில் போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தங்கள் குறித்த அடுத்தகட்டமாக சட்ட ரீதியிலான விசாரணை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

First published:

Tags: ADMK, Chennai corporation, Tender