• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு திடீர் நெஞ்சுவலி- அப்பல்லோவில் அனுமதி

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு திடீர் நெஞ்சுவலி- அப்பல்லோவில் அனுமதி

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • Share this:
    சென்னை காவல் ஆணையராக இருந்து வருபவர் சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ். இன்று வழக்கம் போல் காவல் ஆணையர் அலுவலகத்தின் 8வது மாடியில் பணியாற்றி வந்த போது திடீரென சங்கர் ஜிவாலுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே சங்கர் ஜிவால் வலியால் கூச்சலிட்ட போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த உதவியாளர் ஆம்புலன்ஸிற்கு தகவல் கொடுத்தார். ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் உடனே பாதுகாப்பு காவலர்கள் நாற்காலியில் அமரவைத்து காவல் ஆணையரின் காரிலேயே கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். பரிசோதித்த மருத்துவர்கள் சங்கர் ஜிவாலுக்கு இதயத்தில் இரண்டு அடைப்பு இருப்பதால் அதை சரிசெய்ய ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சங்கர் ஜிவாலை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து ஆஞ்சியோ சிகிச்சை மூலம் ஒரு அடைப்பை நீக்கியுள்ளனர். மேலும் மற்றொரு அடைப்பை நீக்க தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காவல் ஆணையர் சங்கர் ஜிவாலின் நலம் குறித்து கேட்டறிய தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வருகை தந்துள்ளனர். ஆஞ்சியோ சிகிச்சையானது தொடர்ந்து நடைபெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: