சென்னையில் குறைந்தது கொரோனா பாதிப்பு: 14 சிகிச்சை மையங்கள் தற்காலிகமாக மூடல்!

கோப்புப் படம்

சென்னையில் 32 கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தொற்று பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இந்த 32 மையத்தில் மட்டும் 8567 படுக்கைகள் அமைக்கப்பட்டன‌.

 • Share this:
  சென்னையில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் கூடுதலாக அமைக்கப்பட்ட 32 கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் 14 சிகிச்சை மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

  தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவத் தொடங்கியபோது சென்னை கடும் பாதிப்பை சந்தித்தது, தினசரி பாதிப்பு 5 ஆயிரத்தையும் கடந்து பதிவானது. சென்னையில்  மருத்துவமனைகளில் படுக்கை முழுவதும் நிரம்பிய நிலையில் பெரும்பாலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஒட்டுமொத்தமாக 32 கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தொற்று பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இந்த 32 மையத்தில் மட்டும் 8567 படுக்கைகள் அமைக்கப்பட்டன‌.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தற்போது சென்னை உட்பட மாநிலத்தில் பிற பகுதிகளில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது. கொரோனா தொற்று பரவல் குறைந்ததையடுத்து மொத்தம் இருந்த 32 சிகிச்சை மையங்களில் 14 சிகிச்சை மையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

  இதையும் படிங்க:  வட தமிழகத்தில் விரைவில் 22 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் தொழிற்சாலைகள்..

  32 கொரோனா சிகிச்சை மையத்தில் 8567படுக்கைகள் உள்ள நிலையில் அதில் 338 படுக்கைகளில் மட்டுமே நோய் தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஒரு வேளை மூன்றாம் அலை பரவ வாய்ப்பு ஏற்பட்டால் மீண்டும் இந்த 14 கொரோனா சிகிச்சை மையங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மாநகராட்சி சுகாதார துறை உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
  Published by:Murugesh M
  First published: