• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப் திருட்டு.. சென்னையில் பட்டப்பகலில் துணிகரம்

கார் கண்ணாடியை உடைத்து லேப்டாப் திருட்டு.. சென்னையில் பட்டப்பகலில் துணிகரம்

லேப்டாப் திருடும் காட்சி

லேப்டாப் திருடும் காட்சி

பூந்தமல்லியில் காரின் கண்ணாடியை உடைத்து மர்ம நபர்கள் சிலர் லேப்டாப்பை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    பூந்தமல்லி அருகே காரின் கண்ணாடியை உடைத்து லேப்டாப்  திருடி கொண்டு இருசக்கர வாகனத்தில் எடுத்துச்செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

    ஆவடி பகுதியை சேர்ந்தவர் பிரதிப் இவர் பூந்தமல்லி அடுத்த காட்டுபாக்கத்தில் உள்ள டாடா மோட்டர் கார்  நிறுவனத்தில் கார் வாங்க  வந்துள்ளார்.அப்போது  காரை ஷோரூம் வாசலில் நிறுத்தி விட்டு உள்ளே சென்றுள்ளார். அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவர் உள்ளே சென்றவுடன் காரை நோட்டமிட்டு காரின் கண்ணாடியை உடைத்துவிட்டு காரின் உள்ளே இருந்த விலை உயர்ந்த லேப்டப் பையை எடுத்து கொண்டு இருசக்கர வாகனம் மூலம் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

    காருக்கு முன்பணம் செலுத்திவிட்டு பிரதிப் வெளியே  வந்த பார்த்தபோது காரின் பின் பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளே இருந்த லேப்டப் திருடி போனதை  கண்டு பிரதிப்குமார் அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் இதுகுறித்து ஷோரூம் உரிமையாளர்களிடம் தகவல் தொரிவித்தார்.அப்போது அங்கே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்தில் மர்ம நபர்கள் காரின் கண்ணாடியை உடைத்துவிட்டு காரின் உள்ளே வைக்கப்பட்டிருந்த லேப்டப் பையை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி செல்லும் சிசிடிவி காட்சி பதிவாகி இருந்தது.

    பின்னர் இதுகுறித்து பூந்தமல்லி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் பூந்தமல்லி போலிசார் சிசிடிவி  காட்சிகளை வைத்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆள் நடமாட்டம் அதிகம் அளவில்  காணப்படும் பூந்தமல்லி   முக்கிய சாலையில் காரின் கண்ணாடியை உடைத்து மர்ம நபர்கள் சிலர் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர்: சோமசுந்தரம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: