சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் அதிகாலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு, அதிகாலை ஒன்றரை மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் 2 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். கட்டடத்தின் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தகவலறிந்ததும் அப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
தடயவியல் துறையினரும் தடயங்களை சேகரித்தனர். இதனிடையே, தகவலறிந்து பாஜக அலுவலகத்திற்கு வந்த அக்கட்சி தொண்டர்கள், பெட்ரோல் குண்டுகளை வீசியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்நிலையில் வினோத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாஜக தலைமையகம் கமலாலயத்தில் 3 பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடைபெற்றுள்ளன,
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத ஒரு தாக்குதல் தற்போது நடந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பாஜக ஐடி பிரிவு தலைவர் நிர்மல் குமார் தனது ட்விட்டர் பதிவில், “ பாஜக தலைமையகம் கமலாலயத்தில் 3 பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடைபெற்றுள்ளன, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத ஒரு தாக்குதல் தற்போது நடந்துள்ளது. தலைநகரிலேயே பெட்ரோல் குண்டு கலாச்சாரம், நீங்கள் சட்டம் ஒழுங்கை காக்கும் லட்சணம் இதுதானா” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.