ஆவடி பகுதியில் பெயிண்டர் வெங்கடேஷ் என்பவர் ரத்தம் கக்கி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் காட்டூர் மாந்தோப்பு பகுதியில் நேற்று இரவு சத்தியமூர்த்தி என்பவரின் பிறந்தநாள் கொண்டாட காட்டூர் பேருந்து நிலையம் அருகே உள்ள கோழி கறிகடைக்கு அருகில் உள்ள காலி மனையில் வைத்து பிறந்தநாள் கொண்டாட நன்பர்கள் முடிவு செய்தனர். இந்த இரவு கொண்டாட்டத்திற்காக யெஸ்வந்த்,வெங்கடேஷ், ஜீவா, சத்தியமூர்த்தி ஆகிய 4 பேரும் ஒன்று கூடியுள்ளனர்.
இதில் யெஸ்வந்த் ஆவடி டேங்க பேக்ட்ரி காவல்நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி. சத்தியமூர்த்தி என்பவரிடம் வெங்கடேஷ் மிரட்டி 1000 ரூபாய்க்கு பீர் வாங்க பணத்தை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது அதனால் ஏற்பட்ட சண்டையில் சக நண்பர் வெங்கடேஷ் (இருதய நோயாளியை) யெஸ்வந்த் என்பவர் மார்பு பகுதியில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது.
இதில் நிலை குலைந்த வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வாந்தி எடுத்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தார். வெங்கடேசனை சக நண்பர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். ரத்த வாந்தி ஏற்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சக நண்பர்கள் புட்பால் விளையாடிக் கொண்டு வேகமாக அடித்ததில் வெங்கடேஷ் உயிரிழந்ததாக பொய் நாடகமாடியுள்ளனர்.
வெங்கடேஷின் குடும்பத்தார் கொடுத்த புகாரின் பேரில் அடித்து கொலை செய்யப்பட்டதாக சந்தேக வழக்குப்பதிவு செய்த ஆவடி டேங்க் பேக்டரி போலீஸார் யெஸ்வந்த் உள்ளிட்ட 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தனித்தனியாக விசாரணை நடைபெற்றது. உடற்கூறு ஆய்வின் அடிப்படையிலும் வாக்குமூலத்தின் அடிப்படையிலும் குற்றவாளி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்தியாளர்: கன்னியப்பன்
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.