முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திருட வந்த இடத்தில் வாலிபர் செய்த செயல் - சிசிடிவி பார்த்து அதிர்ந்த உரிமையாளர்

திருட வந்த இடத்தில் வாலிபர் செய்த செயல் - சிசிடிவி பார்த்து அதிர்ந்த உரிமையாளர்

ஆவடி திருட்டு சம்பவம்

ஆவடி திருட்டு சம்பவம்

வீட்டிலிருந்த 4 லவ் பார்ட்ஸ் (love birds) கிளிகளை கூண்டோடு திருடி சென்றதாக காவல் நிலையத்தில் சிசிடிவி ஆதாரத்தோடு புகார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஆவடியில் தன் வீட்டில் நடந்த திருட்டை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இந்த திருடனை கண்டுபிடிக்க உதவிடுமாறு வீட்டின் உரிமையாளர் கேட்டுள்ளார். 

ஆவடி காவல் ஆணையரக  எல்லைக்குட்பட்ட காமராஜர் நகர் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சபீர். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் பிரிவில் பணிபுரிந்து வருகிறார். தனது வீட்டில் நடந்த திருட்டு முயற்சியை யூடியூப் உள்ளிட்ட வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.

Also Read: சென்னையில் லிஃப்டில் தனியாக இருந்த பெண்ணின் முன் ஆபாசமாக நடந்து கொண்ட இளைஞர் கைது...

அதில் இளைஞர் ஒருவர் வீட்டின் மதில் சுவர் மீது ஏறி குதித்து வந்து நோட்டமிடுகிறான். அப்பொழுது கண்காணிப்பு கேமரா இருப்பதை கண்ட அவன் கேமராவை திரும்பி வைக்கும் நிலையில் அது மீண்டும் பழைய நிலையில் வந்து விடுகிறது. அதனை அறியாத திருடன் அங்கிருந்த பொருட்களையெல்லாம் ஆராய்ந்து பார்க்கிறான். பின்னர் அங்கிருக்கும் குளிர்சாதன பெட்டியை திறந்து கப் ஐஸ்யை எடுத்து சாப்பிட்டு கொண்டே மீண்டும் வீட்டை நோட்டமிடுகிறான்.

பின்னர் சில ஐஸ்கிரீமை எடுத்துக்கொண்டு சென்றுள்ளான். இவை அனைத்து அங்கிருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை சமூகவலைதளங்களில் பதிவிட்டு இந்த திருடனை கண்டுபிடிக்க உதவிடுமாறு வீட்டின் உரிமையாளர் கேட்டுள்ளார்.

Also Read: மனைவியின் அக்கா உட்பட பல பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த கணவன் சிறையிலடைப்பு

இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் கூறுகையில் திருட வந்த திருடன் ஏற்கெனவே ஒருமுறை இரவில்  வீட்டினுள் வந்து சிசிடிவி கேமராவை மேல் நோக்கி வைத்துவிட்டும்,லவ் பேர்ட்ஸ் கூண்டு கட்டப்பட்டிருந்த கம்பிகளை அவிழ்த்து விட்டும் சென்றுள்ளான். அப்போது நாங்கள் சுதாரிக்கவில்லை, மீண்டும் வீட்டினுள் வந்து லவ் பார்ட்ஸ் கிளியை திருடி சென்றுள்ளான் என கூறினார். இதுகுறித்து ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது எனினும் சுற்றுவட்டார பகுதியில் மற்றவர்கள் ஜாக்கிரதை யாக இருக்கவே இதனை இணையத்தில் பதிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக திருடர்கள் திருட வந்த இடத்தில்  ஐஸ்கிரீம் சாப்பிடுவது ,டிவி பார்ப்பது  பிரியாணி செய்து சாப்பிடுவது அங்கேயே உறங்குவது என திருடர்கள் காவல்துறை மீது சிறிதும் பயமே இல்லாமல் இவர்கள் நள்ளிரவில் உலாவுவதும் பொதுமக்களுக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு  மிகவும் ஆபத்து எனவும் எச்சரிக்கிறார் சபீர்.

செய்தியாளர்:  கன்னியப்பன்

First published:

Tags: Avadi, Birds, Chennai, Crime News, Theft