ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஃபுட் போர்ட் அடித்த மாணவர்கள்.. நடுவழியில் பேருந்தை நிறுத்திய ஓட்டுனர்.. திருவள்ளூரில் பரபரப்பு

ஃபுட் போர்ட் அடித்த மாணவர்கள்.. நடுவழியில் பேருந்தை நிறுத்திய ஓட்டுனர்.. திருவள்ளூரில் பரபரப்பு

மாணவர்கள் வாக்குவாதம்

மாணவர்கள் வாக்குவாதம்

அரசு பேருந்தின் கூரை மீது பயணம் செய்ய முயன்ற பள்ளி மாணவர்கள் ஒட்டுநரை  ஒருமையில் பேசி ஆபாச வார்த்தைகளால்  திட்டியதால்  பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பேருந்து பணிமனையில் இருந்து மாதவரம் தொகுதிக்குட்பட்ட புதியகன்னியம்மன் நகர் நோக்கி தடம் எண் 61k அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் பயணித்த சில பள்ளி மாணவர்கள் பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் கூச்சலிட்டு படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு இடையூறு செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

  Also Read:  ஐய்யப்ப பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு 64 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

  மேலும் சில மாணவர்கள் பேருந்தின் மேற்கூரையில் ஏறி ஆபத்தான முறையில் பயணம் செய்யமுற்பட்டனர். இதனை பார்த்த பேருந்து நடத்துனர் மாணவர்களை பேருந்தின் உள்ளே வரும்படி அறிவுரை கூறியுள்ளார் .ஆனால் , சில வம்புக்கார மாணவர்கள் உள்ளே செல்லாமல் ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.இதனால் கோபமடைந்த ஓட்டுனர் பேருந்தை  கோவில்பதாகை அருகே சாலையின் நடுவே நிறுத்தி வைத்து கீழே இறங்கி வந்து மாணவர்களுக்கு புத்தி சொல்ல அவரை ஒரு மாணவன் மிரட்டினர்.அதிலும் ஒரு நபர் ஆபாச வார்த்தையில் திட்டியதால் அவரை ஓட்டுநர் நடத்துனர் இருவரும் சேர்ந்து இழுத்துச் சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

  Also Read:  சீட்டு பணம் ரூ.5 லட்சத்தை சுருட்டியதாக பெண் காவலர் மீது புகார்... நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் வேதனை

  இந்த சம்பவத்தை படம் பிடித்த வாகன ஓட்டிகள் அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.  இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மாணவர்களுக்கு ஆவடியில் இருந்து வேல்டெக் மார்கமாக செல்லும் பேருந்து வசதியை அதிகபடுத்த வேண்டும் படிகட்டல் தொங்கி செல்லும் மாணவர்களை அறிவுரை வழங்கி மாற்று பேருந்தில் செல்ல ஏற்பாடு செய்து தர வேண்டும் என சமூகஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  ஏற்கனவே ரூட்டு தல விவகாரத்தில் 50 க்கும் மேற்பட்ட சென்னையை சேர்ந்த அரசு கல்லூரி மாணவர்களிடம் உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கி உள்ள நிலையில் தற்போது மீண்டும் பள்ளி மாணவர்கள் இதே விவகாரத்தில் கையில் எடுப்பது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Bus, Chennai, Police, School student, Tamil News