ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கஞ்சா பழக்கம்.. மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. நிர்வாண வீடியோ - ஆவடி இரட்டை கொலையும் அதிரவைக்கும் பின்னணியும்

கஞ்சா பழக்கம்.. மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. நிர்வாண வீடியோ - ஆவடி இரட்டை கொலையும் அதிரவைக்கும் பின்னணியும்

ஆவடி இரட்டைக் கொலை

ஆவடி இரட்டைக் கொலை

இரட்டை கொலை நடந்த 24 மணி நேரத்தில் கொலையாளிகளை பிடித்த தனிப்படை போலீசாரை ஆவடி மாநகர கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டினார்

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

ஆவடி இரட்டை கொலை சம்பவத்தில் 1சிறுவன் உட்பட 9 பேரை  கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு நேற்று மாலை அம்பத்தூர் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னை ஆவடி, வசந்தம் நகர், சிவகுரு தெருவை சேர்ந்தவர் சுந்தர்(29). இவர் ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. ஆவடி, நேரு பஜார், மசூதி பின்புறத்தில் வசித்தவர் அசாருதீன்(30). இவர், மீன் கடை ஊழியர். இவரது மனைவி கவுசிக். இவர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். சுந்தர், அசாருதீன்  இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள். இதற்கிடையில், கடந்த 12ந்தேதி இரவு ஆவடியில் உள்ள மத்திய அரசின் பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான ஓ.சி.எப் மைதானத்தில் சுந்தர், அசாருதீன் ஆகியோர் தலை, முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

Also Read: ஏரியாவுல யார் கெத்து.? கடையில் புகுந்து வாலிபரை வெட்டிய கும்பல்

புகாரின் அடிப்படையில், ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வந்தனர். இதில், ஆவடி, கொள்ளுமேடு, இரட்டை குட்டை தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன் (32), தனது நண்பர்கள், கூலிப்படையினரை ஏவி சுந்தர், அசாருதீன் ஆகியோரை கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், மணிகண்டனுக்கு பிரிசில்லா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.  இதற்கிடையில், 2018ம் ஆண்டு மணிகண்டன் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அப்போது, ஆவடி, பெரியார் நகரை சார்ந்த ஆட்டோ டிரைவர் ஜெகன் (30) என்பவருடன் பிரிசில்லாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு ஜெகன், பிரிசில்லாவை அழைத்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தார். இதன்பிறகு, மணிகண்டன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில், சமீப காலமாக பிரிசில்லா அடிக்கடி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்து உள்ளார். அவருக்கு மருத்துவ சிகிச்சை செய்ய பணம் இல்லாமல் ஜெகன் சிரம்பட்டு வந்து உள்ளார். இந்நிலையில், கடந்த 4ந்தேதி ஜெகன், மணிகண்டனை ஆட்டோவில் கடத்தி சென்று உள்ளார். அப்போது, ஜெகனின் நண்பர்கள் சுந்தர், யாசின் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது,  மணிகண்டனின்  பிரிசில்லாவின் மருத்துவ செலவிற்கு ரூ.1லட்சம் பணம் கேட்டு உள்ளார்.

Also Read: UPS-ல் தீப்பிடித்து விபத்து.. கோவையில் தாய், 2 மகள்கள் உயிரிழந்த சோகம்

மேலும், அவரிடம் ஆந்திராவுக்கு சென்று 2கிலோ கஞ்சா வாங்கி தரும்படியும் ஜெகன் கேட்டு உள்ளார். பின்னர், மணிகண்டனை நிர்வாணப்படுத்தி ஜெகன் வீடியோ எடுத்துள்ளார். மேலும், மணிகண்டனிடன் பணம், கஞ்சா தராவிட்டால், அந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். அப்போது,  ஜெகனிடம்  இருந்து தப்பிக்க மணிகண்டன் 10நாளில் பணம் ஏற்பாடு செய்து தருகிறேன் என கூறி உள்ளார். இதன் பிறகு, மணிகண்டனை ஜெகன் விடுவித்து உள்ளார். தனது மனைவியை அபகரித்ததோடு மட்டுமல்லாமல், தன்னை நிர்வாணப்படுத்தி பணம், கஞ்சா கேட்டு மிரட்டியதால், ஜெகனை தீர்த்துக்கட்ட மணிகண்டன் முடிவு செய்துள்ளார். இந்த கொலையை செய்ய நண்பர்கள், கூலிப்படையினர் மணிகண்டன் ஏற்பாடு செய்து உள்ளார்.

இதன்பிறகு, சம்பவதன்று மணிகண்டன்,  நான் பணம், கஞ்சா ஏற்பாடு செய்துவிட்டேன், உன்னிடம் கொடுக்க வேண்டும் என ஜெகனிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய ஜெகனும் ஆவடி, ஓ.சி.எப் மைதானத்திற்கு பணத்துடன் வருமாறு கூறியுள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் அங்கு வந்துள்ளார். அப்போது அங்கு ஜெகன் தனது நண்பர்களான சுந்தர், அசாருதீன் ஆகியோருடன் வந்துள்ளார். அங்கு யாசின் வரவில்லை. பின்னர்,  அனைவரும் அங்கு மது அருந்தி கொண்டு பேசியுள்ளனர். அப்போது, மணிகண்டன் ஏற்பாடு செய்த நண்பர்கள் கூலிப்படையினர் 8பேர்கள் திடீரென்று அங்கு வந்தனர். பின்னர், அவர்கள் ஜெகனை கொல்ல முயன்றனர். அப்போது, சுந்தர், அசாருதீன் ஆகியோர் கூலிபடையினரை தடுத்து உள்ளனர்.

இதனையத்து, ஆத்திரமடைந்த சுந்தர், அசாருதீன் ஆகிய இருவரை கூலிப்படையினர் சரமாரி வெட்டி கொலை செய்தனர். இதற்கிடையில், அங்கிருந்து ஜெகன் தப்பி ஓடி உயிர் பிழைத்து கொண்டார் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து, உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி தலைமையில் தனிப்படை போலீசார் மணிகண்டன் (32), அவரது நண்பர்களான கோவில்பாதாகை, திருமுல்லைவாயல் சாலையை சேர்ந்த பிரகாஷ் (25), மிட்டினமல்லி, ராஜா தெருவை சேர்ந்த விஜய் (26), முத்தாபுதுப்பேட்டையை சேர்ந்த பாரதி என்ற பார்த்தீபன் (22), கொள்ளுமேடு, ஒண்டி தெருவை சேர்ந்த சதீஷ் (21) மற்றும் கூலிப்படையினரான எண்ணூர், சிவபாடை வீதியை சேர்ந்த வினோத் (19), அஜித்குமார் (20), வியாசர்பாடி, சத்யா நகரை சேர்ந்த தனுஷ் (20), கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம், மதிமா காலனியை சேர்ந்த கப்பார் (21) ஆகிய 9பேர்களை  கைது செய்யப்பட்டனர்.

Also Read: செல்போன் திருடியதால் நண்பன் அடித்துக்கொலை.. சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

மேலும், இவர்கள் அனைவரிடமும் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி 1சிறுவன் உட்பட 9 பேரை  கைது செய்து விசாரணை நடத்தப்பட்டு நேற்று மாலை அம்பத்தூர் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டனர் .இரட்டை கொலை நடந்த 24 மணி நேரத்தில் கொலையாளிகளை பிடித்த தனிப்படை போலீசாரை ஆவடி மாநகர கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டினார்.

செய்தியாளர்: கன்னியப்பன்

First published:

Tags: Avadi, Cannabis, Chennai, Chennai Police, Death, Double murder, Illegal affair, Illegal relationship