சென்னையில் ஆசை வார்த்தைகள் கூறி 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மின்வாரிய தலைமை அலுவலக ஊழியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் தனியார் பள்ளியில் ஒன்பதாவது வகுப்பு பயின்றூ வருகிறார். சிறுமி அவ்வப்போது வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் சிறுமியின் பெற்றோர் அவரை ராயபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு சிறுமியை பரிசோதித்து பார்த்த மருத்துவமர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடித்தனர். இந்த தகவலை சிறுமியின் பெற்றோரிடம் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இத்தகவல் கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், அவர்கள் புகார் அளித்தனர்.
பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், திருவொற்றியூரைச் சேர்ந்த ராஜசேகரன் தான் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணம் என தெரியவந்தது. 48 வயதாகும் ராஜசேகரன் மவுண்ட் ரோடு, மின்வாரிய தலைமையகத்தில் உதவி தணிக்கை அலுவலராக வேலை பார்த்துவருகிறார்.
இதையும் படிங்க: காதலிக்க மறுத்ததால் இளைஞர் வெறிச்செயல் - கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து
சிறுமியின் வீட்டருகே உள்ள உறவினரை அவ்வபோது, ராஜ சேகரன் பார்க்க சென்றுள்ளார். அப்போது, சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் யாரும் இல்லாத நேரத்தில், மாடிக்கு அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில், ராஜசேகரனை போலிசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர்: அசோக் குமார் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.