Amma Canteen Attack | சென்னையில் அம்மா உணவகத்தை சூறையாடிய திமுகவினர் - பரபரப்பு காட்சிகள்

தாக்குதல் வீடியோ

அம்மா உணவகம் மீது திமுகவினர் நடத்திய தாக்குதல் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Share this:
    சென்னை முகப்பேர் கிழக்கு ஜேஜே நகர் பகுதியில் திமுகவினர் மதுரவாயல் தொகுதியில் வெற்றி பெற்றதற்காக நன்றி தெரிவித்து அவ்வழியாக சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த அம்மா உணவகத்தில் இருந்த பெயர் பலகை வெளியே எடுத்து வந்து சாலையில் வீசி எரிந்துள்ளனர்.

    மேலும் அம்மா உணவகத்தில் நுழைந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி, அம்மா உணவகம் என்ற பெயர்ப்பலகை தொங்க விடக்கூடாது என அங்கிருந்த ஊழியர்களை எச்சரித்து சென்று உள்ளனர். அம்மா உணவகம் மீது தாக்குதல் நடத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.



    இந்நிலையில் அம்மா உணவகம் மீது தாக்குதல் நடத்தியவர்களை ஸ்டாலின் கட்சியிலிருந்து நீக்க உத்தரவிட்டுள்ளார் என்று திமுக எம்எல்ஏ சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
    இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மதுரவாயல் பகுதியில் அரசு உணவகத்தின் பெயர் பலகையை எடுத்த இரண்டு கழக தோழர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும்,அவ்விருவரை கழகத்திலிருந்து நீக்கவும் வணக்கத்திற்குரிய கழகத்தலைவர் அவர்கள் உடனடியாக உத்தரவிட்டார் என்றுள்ளார்.

    Published by:Vijay R
    First published: