Home /News /tamil-nadu /

தாலி பிரித்து கட்டும் நிகழ்வுக்கு பணமில்லை - செயின் பறிப்பில் ஈடுபட்ட புதுமாப்பிள்ளை

தாலி பிரித்து கட்டும் நிகழ்வுக்கு பணமில்லை - செயின் பறிப்பில் ஈடுபட்ட புதுமாப்பிள்ளை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

சென்னையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட புதுமாப்பிள்ளையை போலீஸார் கைது செய்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட புதுமாப்பிள்ளையை போலீஸார் கைது செய்துள்ளனர்.

    சென்னை அண்ணாநகர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு புவனேஸ்வரி என்ற பெண் நடந்துச் சென்றுள்ளார். அப்போது பைக்கில் வந்த மர்மநபர் ஒருவர் புவனேஸ்வரி அணிந்திருந்த தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அந்தப்பெண் அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    புகாரை பெற்றுக்கொண்ட காவலர்கள் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு ஆய்வு செய்தனர். அதில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட நபர் ஆன்லைனில் உணவு பொருள்களை டெலிவரி செய்யும் நபர்கள் அணியும் உடையை அணிந்திருந்தார்.

    அதனை வைத்து போலீஸார் நடத்திய விசாரணையில் யோகேஷ் ( வயது 29) என்ற இளைஞர் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். யோகேஷ் தனியார் உணவு டெலிவரி கொடுக்கும் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

    3-வது மாதத்தில் மனைவிக்கு தாலி பிரித்து கட்டும் நிகழ்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது. தாலி சரடு வாங்க போதிய பணம் இல்லாததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பணத்திற்கு ஏற்பாடு செய்ய முயற்சித்துள்ளார். ஆனால் கொரோனா சுழலில் யாரும் பணம் கொடுக்க முன்வரவில்லை. இந்நிலையில் செயின் பறிப்பில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளார். அப்போது தான் சாலையில் தனியாக நடந்து வந்துக்கொண்டிருந்த புவனேஸ்வரியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் யோகேஷ் கைது செய்தனர்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: CCTV Footage, Chennai, Crime | குற்றச் செய்திகள், Gold Robbery, Youth arrested

    அடுத்த செய்தி