கிண்டி ரயில் நிலையம் அருகே உள்ள சங்கீதா உணவகத்தில் பாத்ரூமில் செல்போனை வைத்து வீடியோ பதிவு செய்ததாக திமுக பிரமுகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த பாரதி. இவர் மதுரவாயல் தொகுதி திமுக மகளிரணி அமைப்பாளராக இருந்து வருகிறார். இவர் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாவட்ட செயலாளரை சந்திப்பதற்காக கிண்டி வந்துள்ளனர். உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நேர்காணலில் கலந்துக்கொண்டு கிண்டி ரயில் நிலையம் அருகே உள்ள சங்கீதா உணவகத்தில் இன்று மதியம் சாப்பிட சென்றுள்ளார்.
அங்குள்ள பாத்ரூம் சென்ற பொழுது அங்கு அட்டை பெட்டியில் மறைத்து வைக்கப்பட்ட செல்போனில் கேமரா ஆன் செய்யப்பட்டிருந்தது. செல்போனில் வீடியோ பதிவு செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் செல்போனை பறிமுதல் செய்து கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் கிண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.