சென்னையில் வாகன விபத்துகளை குறைப்பதற்காகவும் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை சென்னை போக்குவரத்து காவல்துறையினர் எடுத்து வருகின்றனர். சமீபகாலமாக பெரும்பாலான வாகனங்கள் குறிப்பாக இரண்டு சக்கர வாகனங்களில் பதிவு எண் தகடு (Registration Number Plates) மோட்டார் வாகன விதிகளுக்கு புறம்பாகவும் (Defective Number Plates), குறிப்பாக மடக்கி வைக்கும் வாகன எண் பலகை கொண்டு வாகனம் இயக்கி விதி மீறல்களில் ஈடுபடும் போதும், விபத்துக்கள் ஏற்படுத்தும் போதும் அவற்றை கண்டறிய போக்குவரத்து போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டு வந்தது.
இதனை தவிர்ப்பதத்காக சென்னை போக்குவரத்து காவல்துறையினர் சிறப்பு வாகன தணிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மே 1 ம் தேதி சென்னை முழுவதும் போக்குவரத்து காவல்துறையினர் சிறப்பு வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர். இந்த சிறப்பு நடவடிக்கையில் குறைபாடுள்ள பதிவு எண் தகடுகள் (defective Number Plate) கொண்ட 821 வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக மடக்கி வைக்கும் வாகன எண் பலகை கொண்டு வாகனம் ஓட்டியதாக 9 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
மேலும், அனுமதிக்கப்படாத இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த (No Parking) 215 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மொத்தமாக மே 1 ம் தேதி நடத்தப்பட்ட சிறப்பு வாகன தணிக்கையில் 1,036 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக கடந்த 2ம் தேதி நடைபெற்ற சிறப்பு வாகன தணிக்கையில் அதிக சப்தம் எழுப்பும் ஹாரன், மியூசிக்கல் ஹாரன், அதிக ஒலியெழுப்பும் சைலெண்சர், மோட்டார் வாகன சட்ட விதிமுறைகள் மீறி வாகன பதிவெண் தகடு பொறுத்தி வாகனம் இயக்கிய 607 நபர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குறிப்பாக அதிக சப்தம் எழுப்பும் ஹாரம் பயன்படுத்தியதாக 163 வழக்கு பதிவுகளும், மியூசிகல் ஹாரன் பயன்படுத்தியதாக 17 வழக்கு பதிவுகளும், அதிக சப்தமெழுப்பும் சைலெண்சர் பயன்படுத்தியதற்காக 103 வழக்கு பதிகவுகளும், விதிகள் மீறி வாகன பதிவெண் பயன்படுத்தியதற்காக 291 வழக்குகள் என மொத்தம் 607 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
மோட்டார் வாகன சட்டத்துக்கு புறம்பாக வாகனம் இயக்குபவர்கள் மீது தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வாகன ஓட்டிகள் மோட்டார் வாகன சட்டத்துக்கு புறம்பாக வாகனங்கள் இயக்கக்கூடாது எனவும் சென்னை போக்குவதத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bike, Case, Chennai, Traffic Police