கட்டப்பஞ்சாயத்தில் நடந்த கத்தி குத்து.. 5 திமுக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு..

Youtube Video

பூந்தமல்லியில் கமிஷன் பெற்றுக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்த திமுக நிர்வாகிகள் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவான திமுக நிர்வாகிகள், போலீஸ் பிடியில் சிக்குவார்களா?

  • Share this:
    சென்னை பூந்தமல்லியை சேர்ந்தவர் தொழிலதிபர் காளியப்பன் இவர் பூந்தமல்லியில் நாவலாடி கொங்குநாடு என்ற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். காளியப்பன் தனது உணவகத்தை பார்க்கிங் வசதியுடன் விரிவுபடுத்த எண்ணி அருகில் செயல்பட்டு வரும் சிறிய அளவிலான கடைகளை வாங்க முடிவு செய்தார். அதன்படி அருகில் கோனி வியாபாரம் செய்து வரும் 60 வயது முதியவர் ஜெயேந்திரகுமார் என்பவரிடம் அவரது கடையை விலை பேசி உள்ளார்.

    அவர் கடையைத் தர மறுப்பு தெரிவித்ததால் ஹோட்டல் உரிமையாளர் காளியப்பன் திமுக பூந்தமல்லி ஒன்றிய ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் கே.ஜி.ஆர். ஸ்டாலினை அணுகியுள்ளார். தனது ஹோட்டல் அருகிலுள்ள கடையை குறைந்த விலைக்கு வாங்கி தருமாறும் அதற்கு கமிஷனாக ஒரு தொகையைத் தருவதாகவும் கூறியுள்ளார்.

    இதையடுத்து கேஜிஆர். ஸ்டாலின் தலைமையில், காட்டுப்பாக்கம் திமுக வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த பிரகாஷ், திமுக வழக்கறிஞர் அருண் காட்டுப்பாக்கம் 10வது வார்டு மாணவரணி நிர்வாகி நித்திஷ் உள்ளிட்ட ஐந்து பேர் சென்று முதியவர் ஜெயேந்திர குமாரை கடையை காலி செய்யுமாறு மிரட்டியுள்ளனர். அதற்கும் முதியவர் மறுப்பு தெரிவிக்கவே, கடையை 11 லட்சத்திற்கு வாங்கி கொள்வதாக பேரம் பேசியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க... "ஜெய்ஹிந்த்" குறித்த விவகாரம்.. என்ன சொல்லுகிறார் கேஎஸ் அழகிரி?

    இதனை கடை உரிமையாளரான முதியவர் ஜெயேந்திரகுமார் ஏற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து முதியவரை நம்ப வைத்து ஏமாற்றி வெத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கி உள்ளனர் . முதியவர் ஜெயேந்திர குமார் கையெழுத்து போட்டவுடன் எனக்கு தரவேண்டிய 11 லட்சம் ரூபாயைக் கொடுங்கள் என்று கேட்டுள்ளார்.

    அதற்கு திமுக நிர்வாகிகள் "நீதான் எங்களுக்கு 11 லட்சம் தர வேண்டும்" என்று மிரட்டி கடையில் உள்ள பொருட்களை சாலையில் தூக்கி எறிந்துள்ளனர். கோபமடைந்த முதியவர் "இப்படி என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டீர்களே" என்று வாக்குவாதம் செய்து கொண்டிருந்தபோது, திமுக பிரமுகரான நிதிஷ் குமார் அவரைத் தடுத்துள்ளார்.

    கோபமடைந்த முதியவர் நித்திஷை கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. கத்தி குத்துப்பட்ட நித்தீஸ் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரத்தில் திமுக நிர்வாகி வேல்பாண்டி என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நித்தீஸ்சை கத்தியால் குத்தியதாக வழக்கு பதியப்பட்டு முதியவர் ஜெயேந்திரகுமாரு கைது செய்யப்பட்டார்.



    இந்த வழக்கில் தொடர்புடைய ஹோட்டல் உரிமையாளர் காளியப்பன், முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கே.ஜி.ஆர்.ஸ்டாலின் மற்றும் பிரகாஷ், அருண், நித்திஷ் உள்ளிட்ட 5 பேர் மீது பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். தங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அறிந்த 5 பேரும் தலைமறைவாகி விட்டனர் அவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
    Published by:Vaijayanthi S
    First published: