சென்னை பள்ளிக்கரணையில் டிரான்ஸ்ஃபார்மரில் கார் மோதி விபத்து; தீயில் கருகி இளைஞர் உயிரிழப்பு!

டிரான்ஸ்ஃபார்மரில் கார் மோதி விபத்து

தகவல் அறிந்த மேடவாக்கம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீபற்றி எரிந்து கொண்டிருந்த கார் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அனைத்துள்ளனர்.

  • Share this:
    சென்னை பள்ளிக்கரணை அருகே விஜிபி சாந்தி நகரில் மின்சார டிரான்ஸ்ஃபார்மரில் கார் மோதியதில் ஏற்பட்ட தீவிபத்தில், காரை ஓட்டி வந்த இளைஞர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் காஜா நஜுமுதீன்(35).  இவர் அதே பகுதிநான விஜிபி சாந்தி நகரில் காரை ஓட்டிச்சென்ற போது, அப்பகுதியில் இருந்த டிரான்ஸ்ஃபார்மரில் கார் மோதி விபத்துக்குள்ளாகியது.

    விபத்துக்குள்ளானதும் காரை விட்டு காஜா கீழே இறங்கியுள்ளார். பின்னர், சிறிது நேரத்தில் மீண்டும் காரில் ஏறி காரை ஆன் செய்து பின்னால் எடுக்க முயன்றுள்ளார். அப்போது கார் தீப்பிடிக்க துவங்கியுள்ளது. உடனடியாக காஜா நஜுமுதீன் காரை விட்டு  வெளியேற முயற்சித்துள்ளார்.

    எனினும், கண்ணிமைக்கும் நேரத்தில் காரில் ஏற்பட்ட தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிய துவங்கியது. இதில், காரில் சிக்கிய காஜா நஜுமுதீன் தீயில் கருகி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த குமார் என்பவர் மேடவாக்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த மேடவாக்கம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீபற்றி எரிந்து கொண்டிருந்த கார் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அனைத்துள்ளனர்.

    மேலும் காரில் இருந்தவரின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தீயில் கருகியவர் காஜா நஜுமுதீன் தானா என்பதை பள்ளிகாரணை போலீசார் உறுதி செய்தனர்.

    இதையடுத்து, தடவியல் நிபுணர் உதவி இயக்குநர் சோப்பியா ஜோசப், சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவரின் தடையங்களை சேகரித்து சென்றார். மேலும் உடைந்த டிரான்ஸ்மார்மரை மாற்றும் பணியில் மின்வாரிய அதிகாரிகள் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    செய்தியாளர் - ப.வினோத்கண்ணன்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: