சென்னையில் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட சகோதரர்கள் கொலை...

Youtube Video

சென்னை கூடுவாஞ்சேரி அருகே செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட சகோதரர்களை, நான்கு பேர் சேர்ந்து கொலை செய்துள்ளனர்.

  • Share this:
    கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் இம்ரான். இவர் தனது சகோதரர்களான முகமது இஸ்மாயில், இமாம் அலியுடன் சேர்ந்து மாடம்பாக்கம் ஏரி அருகே மது அருந்தியுள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற ரமேஷ் என்பவரிடம் மூன்று பேரும் செல்போனை பறித்து, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர்களிடமிருந்து தப்பியோடிய ரமேஷ், தனது நண்பர்களான ராஜ், முத்து மற்றும் பொன்னையாவிடம் நடந்ததை கூறியுள்ளார்.

    இதையடுத்து நான்கு பேரும் மாடம்பாக்கம் ஏரிக்கு சென்றுள்ளனர். அங்கே மது அருந்தி கொண்டிருந்த மூன்று சகோதர்களையும் கத்தியால் தாக்க, இம்ரான் மட்டும் அந்த கும்பலிடம் இருந்து தப்பியுள்ளார். தலை மற்றும் கை, கால் பகுதிகளில் பலத்த காயமடைந்த இமாம் அலி மற்றும் முகமது இஸ்மாயில் உயிரிழந்தனர்.

    மேலும் படிக்க... மாநிலம் முழுவதும் இன்று இறைச்சி, மீன் கடைகள் அடைப்பு... கொரோனா பரவலை தடுக்க அரசு நடவடிக்கை



    இதையடுத்து இரண்டு பேரின் சடலத்தையும் ஏரியின் உட்பகுதிக்குள் அவர்கள் வீசியுள்ளனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீசார், இரண்டு பேரின் சடலத்தையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழிப்பறி சகோதரர்களை கொலை செய்த ரமேஷ், முத்து, பொன்னையா, ராஜ் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மேலும் படிக்க... ஸ்ரீரங்கம்: சித்திரை தேர் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது..



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: