கால் செய்தால் போதும், டீசல் வீடு தேடி வரும்... சென்னையில் அறிமுகம்

கால் செய்தால் போதும், பெட்ரோல் வீடு தேடி வரும்

Diesel Door Delivery | சென்னையில் முதல் முறையாக டோர் டூ டோர் டீசல் போன் செய்தால் இருசக்கர வாகனம் மூலம் வீடு தேடி விநியோகம் அம்பத்தூரில் முதல் முறையாக இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  சென்னையில் ஜெர்ரிகேன்கள் வழியாக நேரடியாக டீசல் டோர் டெலிவரி செய்யும் சேவையை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தொடங்கியிருக்கிறது .

  சென்னை மாநகரில் " ஜெர்ரிகேன் " ( JerryCan " ) என்ற பெயரிலான ஒரு திட்டத்தின் மூலம் எரிபொருள் தேவைப்படுவோருக்கு அவர்களின் இருப்பிடங்களுக்கே பெட்ரோல், டீசலை நேரடியாக வழங்கும் வசதியை BPCL தொடங்கியிருக்கிறது .

  நகர்வின்றி நிறுவப்பட்டுள்ள சாதனங்கள் மற்றும் டீசல் ஜெனரேட்டர்களை வைத்திருக்கின்ற சிறு நுகர்வோர்களுக்கு டீசலை வழங்குவதற்கான பாதுகாப்பான வழிமுறையாக , PESO 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஜெர்ரிகேன் ஒப்புதல் பெற்றிருக்கிறது .

  சென்னை மாநகரில் அம்பத்தூர் கள்ளிக்குப்பம் என்ற இடத்தில் அம்பத்தூர் - புழல் சாலையில் அமைந்துள்ள BPCL சில்லரை விற்பனை நிலையத்தில் நடைபெற்ற விழாவில் , ரீடெய்ல் துறையின்  தெற்கு தலைவர் ஸ்ரீ இந்தர்ஜித் சிங் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார் .  BPCL -ன் உயரதிகாரிகள் , டீசல் டெலிவரிக்கான ஜெர்ரிகேனை அறிமுகம் செய்து , டெலிவரி வாகனங்களின் செயல்பாட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தனர் . வாடிக்கையாளரின் தேவையைச் சார்ந்து , இரண்டு சக்கர வாகனங்கள் அல்லது பெரிய வாகனத்தின் வழியாக இந்த டெலிவரி மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அம்பத்தூர் சுற்று வட்டாரத்தில் 5 கிலோமீட்டருக்கு இந்த சேவையை 9500160063, 9444677246 என்கிற எண்ணை தொடர்பு கொண்டால் எரிபொருள் கிடைக்கும்.

  இத்திட்ட அறிமுகத்தின் மூலம் வரும் நாட்களில் மாநகரின் அனைத்துப் பகுதிகளையும் மற்றும் புறநகர் பகுதிகளையும் உள்ளடக்கி , 25 சில்லரை விற்பனையகங்களில் இதே வசதிகளுடன்  BPCL வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: