சென்னை அம்பத்தூர் அருகே பெயிண்ட் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
மின்கசிவு காரணமாக பெயிண்ட் உற்பத்தி செய்யும் ரசாயன மூலப் பொருட்களை சேமித்து வைத்த குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு மீட்புக் குழுவினர் 3 மணி நேரம் போராடி வெற்றிகரமாக தீயை அணைத்தனர்.
சென்னை மாநகராட்சி 32 வது வார்டு கொளத்தூர் விநாயகபுரம் லட்சுமி அம்மன் நகரில் வசித்து வருபவர் சங்கர். இவருக்கு சொந்தமான ஸ்டாலின் ஸ்பெஷாலிட்டி பெயிண்ட்ஸ் எனும் நிறுவனம் உள்ளது.
இந்த நிறுவனத்துக்கு சொந்தமான ரசாயன கெமிக்கல் குடோனில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக உயரழுத்த சேமிப்பு பேரல் வெடித்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு குடோன் முழுவதும் தீ பற்றி எரிந்தது.
இதையும் படிங்க - சிறையில் சோஃபா, ஏசியா போட்டு கொடுப்பார்கள்? ஜெயக்குமார் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி!
இதையடுத்து, பொதுமக்கள் தீ கட்டுப்பாட்டு அறைக்கு அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை, மாதவரம் , திரு.வி.க நகர், செங்குன்றம், செம்பியம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு மீட்புக் குழுவினர் கட்டுக்கடங்காமல் கொழுந்துவிட்டு எரிந்த தீயை மிகவும் துரிதமாக செயல்பட்டு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் பரவாமல் தீயை அணைத்தனர்.
குடோனுக்குள் பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பேரல்களில் சேமித்து வைத்த பெயிண்ட் கெமிக்கல் என்பதால் தண்ணீர் ஊற்றி அணைக்க முயலும் பொழுது மீண்டும் மீண்டும் வெடித்து சிதறியபடி தீ கட்டுக்குள் வராமல் எரிந்து கொண்டே இருந்தது.
சம்பவ இடத்திற்கு நேரில் வந்த மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்களை நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம், குடியிருப்பு பகுதிகளில் எளிதில் பற்றகூடிய கெமிக்கல் குடோனில் சேமித்து வைக்கக்கூடிய தொழிற்சாலைகள் அதிகமாக மாதவரத்தில் தான் இருக்கிறது.
2 ஆண்டுகள் முன்பு GNT சாலையில் இதுபோன்ற எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை சேமித்து வைத்த இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. அதை அணைக்க மூன்று நாட்கள் தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
ஆகவே சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு நான் இது சம்பந்தமாக புகார் அனுப்ப இருக்கிறேன்.இது போன்ற வசிக்கின்ற இடங்களிலே தீப்பற்றி எரியக்கூடிய பொருட்கள் சேமித்து வைக்கக்கூடிய கிடங்குகளை முதலிலேயே அப்புறப்படுத்த வேண்டும் என தீயணைப்பு பாதுகாப்பு துறைக்கும், சென்னை மாநகராட்சிக்கும் இதுவே என்னுடைய கோரிக்கையாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
செய்தியாளர் - கண்ணியப்பன்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.