• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • ஊரடங்கால் பசியுடன் போராடும் பார்வையற்றோர்.. ரயில்களில் பொம்மைகள் விற்று பிழைப்பு நடத்தியவர்களின் அவலம்..

ஊரடங்கால் பசியுடன் போராடும் பார்வையற்றோர்.. ரயில்களில் பொம்மைகள் விற்று பிழைப்பு நடத்தியவர்களின் அவலம்..

பார்வையற்றோர்

பார்வையற்றோர்

குடும்பத்தை வறுமையில் இருந்து காக்க வேண்டும் என்பதற்காக காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை ரயில்களில் பொம்மைகள், உணவு பொருட்களை விற்று அதில் கிடைக்கும் சிறு வருமானத்தைக் கொண்டு தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.

 • Share this:
  கொரோனா ஊரங்கள் சமூகத்தில் அடித்தட்டு மக்கள் தவித்துக் கொண்டிருக்க பல்லாவரத்தில் வசிக்கும் பார்வையற்றோர் தங்களது வாழ்க்கையை நடத்த முடியாமல் உண்ண உணவின்றி வறுமையில் போராடி வருகின்றார்கள்.

  உலகெங்கிலும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தற்போது இந்தியாவிலும் வெகுவாக பரவி வருகின்றது தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா அலையை கட்டுப்படுத்த  தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.

  ரெயில்கள் பேருந்துகள் இயங்காது, கம்பெனிகள் திறக்க கூடாது பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பொதுமக்களின் நலனுக்காக அரசாங்கம் உத்தரவு பிறப்பித்தது.
  இந்த உத்தரவு பிறப்பித்ததில் இருந்து அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் இழந்து பலபேர் உணவின்றி தவித்து வரும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.

  ஊரடங்கால் குறிப்பாக யார் மிக அதிகளவில் பாதிக்கப்படுகின்றார்கள் என்று நாம் பார்த்தால் சென்னை பல்லாவரம் அடுத்துள்ள கண்டோன்மெண்ட் பகுதியில் வசித்து வரும் பார்வையற்றோர்கள் என்று தான் சொல்ல முடியும். அப்பகுதியில் சுமார் 20 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் 24 பேர்  பார்வையற்றோர். இவர்கள் தலைமையில் தான் இந்த குடும்பங்கள் இயங்கி வருகிறது.
  24 பேரும் சிறுவயதிலிருந்தே ஒன்றாக படித்து நண்பர்களாக இருந்து வருபவர்கள். ஒரு நல்ல நட்பிற்கு வயது என்பது என்றும் தடை இல்லை, காசு பணமும்  முக்கியம் இல்லை, கருத்து வேறுபாடு வந்தாலும் பிரிவு வருவது இல்லை, என்றும் மாறாத குணம், உரிமையுடன் பழகும் மனம் இதை விட வேறு ஒன்றும் தேவை இல்லை.

  பார்வையற்றோர்


  நண்பன் இல்லையெனில் இந்த உலகில் வாழ்க்கை இல்லை என்பதற்கு ஏற்ப 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த 24 பேரும் நட்புடன் ஒன்றாக வாழ்கின்றனர். இவர்கள்  சென்னை அடையாரில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் படித்தவர்கள். படிக்கும் போதே எதாவது சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தவர்கள் படிப்பை மட்டும் படிக்காமல் இசையில் எதாவது  சாதிக்க வேண்டும் என்பதற்காக இசைக்கருவிகள் கொண்டு இசையை கற்றுக் கொண்டனர். இதில் ஒருசிலர் நன்றாக பாடவும் செய்வார்கள்.
  இவர்களின் திறமைகளை பார்த்த தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காகவும் திறமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதற்காக இவர்கள் அனைவரையும் சேர்த்து  'புனித இசைக் குழவினர்' என்ற பெயரில் ஒரு குழுவை செயல்படுத்த தொடங்கினார்.

  இதில் பார்வையற்றோர் இணைந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தி அதில் கிடைக்கும் பணத்தை பகிர்ந்து கொண்டு தனது அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர் . அதுமட்டுமின்றி இந்த 24 பேரும் பார்வை இல்லாமல் இருந்தாலும் நன்கு படித்தவர்களும் இருக்கின்றனர். படிப்பிற்கு வேலையும் கிடைக்கவில்லை. தன் குடும்பத்தை வறுமையில் இருந்து காக்க வேண்டும் என்பதற்காக காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை ரயில்களில் பொம்மைகள், உணவு பொருட்களை விற்று அதில் கிடைக்கும் சிறு வருமானத்தைக் கொண்டு தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.

  Read More:   ஜூன் மாதத்தில் இந்த நாட்களில் வங்கிகள் இயங்காது

  தற்பொழுது கொரோனா நோய் காரணமாக யாரும் வெளியே வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்கள் யாரும் வெளியே வராததால் கையில் இருந்த பணத்தை வைத்து இதுவரை சாப்பிட்டு வந்துள்ளனர். தற்போது அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள்.
  இருட்டு வாழ்க்கையில் இருக்கும் எங்களுக்கு ஒரு ஊன்று கோலாய் உதவிட யாராவது வருவார்களா என்று எதிர்பார்க்கின்றனர்.  தமிழக அரசு இதனை கருத்தில் கொண்டு இவர்களின் வாழ்வாதாரத்தை காக்க முன்வரவேண்டும்.

  தாம்பரம் செய்தியாளர் சுரேஷ்..

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Arun
  First published: