Home /News /tamil-nadu /

பாஜக சார்பில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்ட நபர் அடுத்தடுத்து மோசடி வழக்கில் கைது!

பாஜக சார்பில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்ட நபர் அடுத்தடுத்து மோசடி வழக்கில் கைது!

பாஜக சார்பில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்ட நபர் அடுத்தடுத்து மோசடி வழக்கில் கைது!

பாஜக சார்பில் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்ட நபர் அடுத்தடுத்து மோசடி வழக்கில் கைது!

நாகராஜ் செய்த மோசடிக்கு உடந்தையாக இருந்த நாகராஜின் தந்தை விஷ்ணு சாகர் மற்றும் சகோதரி பூர்ணிமா சாகர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை அடையாறு பகுதியில் உள்ள தர்மா பார்மஸியில் மேலாளராக இருந்து வருபவர் முகமது நூருதீன்(61). இவரது நண்பர் மூலமாக ராஜா அண்ணாமலைபுரம் போட் கிளப் பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி நாகராஜ் (31) என்பவருடன் முகமதுக்கு பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் நாளடைவில் தனக்கு பாஜக தலைவர்களுடன் நெருங்கிய நட்பு இருப்பதாக கூறி தொழில் பெருக்கத்திற்காக வங்கியிலிருந்து 75 கோடி ரூபாய் லோன் வாங்கி தருவதாகவும், ஆனால் அதற்கு பணம் செலவாகும் எனக்கூறி பத்திரப் பதிவிற்கு 6.5 லட்சமும், 60 லட்சம் ரூபாய் ஸ்டாம்ப் பேப்பர், 22 லட்சம் டைமண்ட் நகைகள் என மொத்தம் 92 லட்ச ரூபாயை முகமது நூர்தினிடமிருந்து கடந்த 2019ம் ஆண்டு நாகராஜ் பெற்றுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனையடுத்து நீண்ட நாட்களாக லோன் வாங்கி தராமலும், கொடுத்த பணத்தை திருப்பி தராமலும் நாகராஜ் ஏமாற்றி வந்ததால் முகமது சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது செக் ஒன்றை வழங்கியுள்ளார். அந்த செக்கை வங்கியில் செலுத்தியதும் குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணமில்லை என தெரியவந்ததால் முகமது கடந்த 2019 ஆம் ஆண்டு சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் நாகராஜ் மீது புகார் அளித்தார்.விசாரணையில் நாகராஜ் மற்றும் அவரது தந்தை விஷ்னு சாகர் (73), சகோதரி பூர்ணிமா (40) ஆகியோரும் மோசடியில் உடந்தையாக இருந்து தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ்  மூன்று பேர் மீதும் வழக்குபதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நாகராஜை போலீசார் கைது செய்தனர்.

Also read: வன்னிய மக்களின் நிலைமை படிப்படியாக மேம்படும்... முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ராமதாஸ்!

இவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நாகராஜ் கடந்த 2016ஆம் ஆண்டு பாஜக சார்பில் ராணிப்பேட்டை தொகுதியின் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தது தெரியவந்தது.

நாகராஜ் ஏற்கனவே முன்னாள் தமிழக ஆளுநர் ரோசய்யாவின் பேரன் எனக்கூறி தொழிலதிபர் ஃபெவினா என்பவரிடம் ஈ.சி.ஆர் பகுதியில் குறைந்த விலையில் பங்களா வாங்கி தருவதாக கூறி ஒரு கோடிக்கும் அதிகமாக மோசடி செய்த வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தது தெரியவந்தது.

இதே போல் தான் பாஜக தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக கூறி முகமது நூருதினை ஏமாற்றியது தெரியவந்தது. இதேபோல பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை காட்டி ஏராளமானவர்களை இவர் ஏமாற்றி இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

Also read: மண்ணோடும் மழையோடும் போராடும் விவசாயிகளை நா கூசாமல் திருடர்கள் என்பதா? பி.டி.ஆருக்கு அண்ணாமலை கண்டனம்!

இவரால் ஏமாற்றப்பட்ட நபர்கள் இவர் மீது அடுத்தடுத்து புகார் தெரிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.மேலும் நாகராஜ் செய்த மோசடிக்கு உடந்தையாக இருந்த நாகராஜின் தந்தை விஷ்ணு சாகர் மற்றும் சகோதரி பூர்ணிமா சாகர் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக நின்று தோல்வியடைந்த பாஜக நிர்வாகி ஒருவர் மோசடி வழக்கில் அடுத்தடுத்து சிக்கி கைதாகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Published by:Esakki Raja
First published:

Tags: Arrested, BJP

அடுத்த செய்தி