எம்.பி.களின் எண்ணிக்கையை உயர்த்துவது தமிழகத்துக்கு நல்லது: அண்ணாமலை!

அண்ணாமலை

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சமமாக வளர்ச்சியைக் கொண்டு செல்ல மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  • Share this:
தமிழகத்தில் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால் அது தமிழகத்திற்கு நலன் தரும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  கருத்து தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து  பாஜகவின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை இல.கணேசனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை,  இல.கணேசன் தன்னை போன்ற அரசியல்வாதிகளை  செதுக்க கூடியவர் என்றும் தனது அரசியல் ஆசான் இல.கணேசன் என்றும் புகழாரம் சூட்டினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தமிழகத்தில் 1961 பிறகு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 41ல் இருந்து 39 ஆக குறைக்கப்பட்டது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ள நிலையில் இது தொடர்பாக  பாஜகவின் நிலை குறித்து அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், நாடாளுமன்றத்தின் மக்களவையில் அதிக உறுப்பினர்கள் இருப்பது, தமிழகத்திற்கு நல்லது என்றும் உரிய விளக்கத்தை பாஜக நீதிமன்றத்தில் தெரிவிக்கும் என்றுஅதிகப்படியான நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தால் மக்கள் எளிதில் அவர்களை அணுகி பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்றும் கூறினார்.

இதையும் படிக்க: மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பாளரை அறிவித்த திமுக!


மேலும், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சமமாக வளர்ச்சியைக் கொண்டு செல்ல மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும், இதுதான் பாஜகவின் நிலைப்பாடு. பிரிவினை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் பாஜகவுக்கு இல்லை” என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

மேலும் படிக்க: தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யும்... 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Published by:Murugesh M
First published: