முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சென்னைவாசிகளே உஷார்.. விலையுயர்ந்த பைக்குகளை டார்க்கெட் செய்யும் கொள்ளையர்கள்

சென்னைவாசிகளே உஷார்.. விலையுயர்ந்த பைக்குகளை டார்க்கெட் செய்யும் கொள்ளையர்கள்

இருசக்கர வாகனத்தை திருடும் காட்சி

இருசக்கர வாகனத்தை திருடும் காட்சி

சென்னை எண்ணூரில் இருசக்கர வாகனங்களை திருடும் சிசிடிவி காட்சிகள்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சென்னை எண்ணூரில் இரவு நேரத்தில் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது

சென்னை எண்ணூர் பெரிய காசி கோவில் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார் இரவு நேரத்தில் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தவர் வீட்டின் வெளியில் விலை உயர்ந்த ராயல் என்ஃபீல்ட் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுள்ளார் காலையில் எழுந்து பார்க்கும் போது தனது இரு சக்கர வாகனத்தை காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக அருகில் உள்ள எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் புகாரின் அடிப்படையில் வீட்டின் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் இரண்டு மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்வது தெரியவந்தது.

Also Read: மடிப்பாக்கம் செல்வம் கொலை வழக்கு.. தேடப்படும் நபருக்கு பதிலாக சரணடைந்த மற்றொரு நபர் - போலீஸ் விசாரணை

மேலும் ஒருவர் இரு சக்கர வாகனத்தின் மேல் அமர்ந்துகொண்டு ஸ்டேரிங்ல் கைபிடியில் உள்ள சைடு லாக்கை காலால் லாவகமாக உடைத்து திருடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக எண்ணூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

செய்தியாளர்: அசோக் குமார்

First published:

Tags: Bike Theft, CCTV Footage, Chennai, Crime News