சென்னை அருகே டாஸ்மாக்கில் பீர் பாட்டில் வெடித்து விற்பனையாளர் கண்ணில் காயம்!

மதுவிற்பனை

விற்பனையாளர் மகாலிங்கத்துக்கு கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உடன் இருந்த ஊழியர்கள் மீட்டு, அருகில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 • Share this:
  சென்னை அருகே மதுபானக் கடையில் பீர் பாட்டில் வெடித்ததில் விற்பனையாளரின் கண்ணில் காயம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  பூந்தமல்லியில் செயல்பட்டுவரும் மதுபானக் கடையில் மது விற்பனையாளராக பணியாற்றிவரும் மகாலிங்கம் என்பவர், மதுபாட்டில்களை கணக்கீடு செய்து கொண்டிருந்தார்.

  அப்போது, எதிர்பாராதவிதமாக அவருக்கு அருகே பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பீர் பாட்டில் ஒன்று திடீரென வெடித்து சிதறியது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதில், விற்பனையாளர் மகாலிங்கத்துக்கு கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உடன் இருந்த ஊழியர்கள் மீட்டு, அருகில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

  Also read: அமமுக-வின் முக்கிய விக்கெட் அவுட்... திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்

  அவருக்கு கண்ணின் கருவிழியில் பாட்டிலின் துகள் பட்டு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் உடன் பணியாற்றும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
  Published by:Esakki Raja
  First published: