• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருமண ஆசைக்காட்டி பெண்களுடன் உல்லாசம்.. வீடியோ எடுத்து மிரட்டல் - கம்பி எண்ணும் மோசடி மன்னன்

திருமண ஆசைக்காட்டி பெண்களுடன் உல்லாசம்.. வீடியோ எடுத்து மிரட்டல் - கம்பி எண்ணும் மோசடி மன்னன்

கைதான சூர்யா

கைதான சூர்யா

பெங்களூரு இளைஞர் சூர்யா மீது பல்வேறு காவல் நிலையங்களில் 7 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

  • Share this:
    மேட்ரிமோனி மூலம் சந்தித்து பெண்களை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு பல லட்சம் மோசடியில் ஈடுபட்ட இளைஞர் கைது. செல்போனில் 50 பெண்களுடன் உல்லாசமாக இருந்த ஆபாச வீடியோவை பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். 

    சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் திருமணத்திற்காக மேட்ரிமோனி இணையதளத்தில் பதிவு செய்திருந்தார். பெங்களூரை சேர்ந்த intelligence bureau  எஸ்.பியாக பண்புரிந்து வருபவரின் மகன் பொறியியல் பட்டம் படித்த சூர்யா(25) என்ற இளைஞர் திருமணம் செய்து கொள்வதாக மேட்ரிமோனியில் பெண் தேடுவதாக கூறி தனியாக வந்து பெண் பார்த்து வீட்டில் பேசி பழகியுள்ளார்.

    பெண் வீட்டாரிடம் தான் மத்திய மனித உரிமை ஆணையத்தில் விசாரணை அதிகாரியாக பணிபுரிந்து வருவதாகவும் தன்னுடைய பெற்றோர் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும் பெண் பார்க்க சென்றபோது கூறியுள்ளார்.பின்னர் செல்போனில் பேசி பழகி நம்பக தன்மை ஏற்படுத்தும் சூர்யா ஒரு கட்டத்தில் தனியார் விடுதியில் அறை எடுத்து உல்லாசம் அனுபவித்து விட்டு அதனை வீடியோ தனது செல்போனில் பதிவும் செய்துள்ளார். பின்னர் பெண்வீட்டாரிடம் நிலம் ஒன்று வாங்க வைத்திருந்த ரூபாய் 7 லட்சத்தை திட்டமிட்டு சூர்யா அபகரித்துள்ளார்.  இளம்பெண்ணை மட்டும் அழைத்து சென்று பெண்ணை ஏமாற்றி பணத்தை எடுத்து கொண்டு செல்போனை (Switch Off) அணைத்து விட்டு தலைமறைவாகி விட்டார்.

    Also Read:  திருமணம் செய்துகொள்வதாக நகை, பணம் மோசடி: ஏமாற்றிய பெண்ணை காவல்துறையில் பிடித்துகொடுத்த மாப்பிள்ளை

    தனிப்படை விசாரணை

    தொடர்ந்து சூர்யாவின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டும் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண் பின்னர் இச்சம்பவம் குறித்து கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கானத்தூர் ஆய்வாளர் தலைமையில் உதவி ஆய்வாளர் தமிழன்பன், தலைமை காவலர்கள் விஜயகுமார்,  கணேசன், காசிமுருகன், காவலர் சதீஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு சூர்யாவை தேடி வந்த நிலையில் செல்போன் சிக்னலை வைத்து கோவையில் இளம்பெண்ணுடன் தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது  சூர்யாவை கைது செய்தனர்.

    விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

    இதனையடுத்து சூர்யாவை சென்னை கானத்தூர் காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.  விசாரணையில் பல அதிர்ச்சி தரக்கூடிய திடுக்கிடும் தகவல் வெளியாகியதாக போலீசார் நம்மிடத்தில் தெரிவித்தனர். சூர்யா இதுவரைக்கும் சுமார் 50 க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றியது தெரியவந்துள்ளது. மேட்ரிமோனியில் பதிவு செய்துள்ள பெண்களை குறிவைத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பொய்யாக பழகி நம்பிக்கை ஏற்படுத்துவது வழக்கம்.

    Also Read:  சுற்றுலா செல்வதாக கூறி, காரை வாங்கி அடகு வைத்த நண்பரை தட்டி கேட்ட இளைஞர் வெட்டி படுகொலை!

    செல்போனில் இருந்து வீடியோக்கள்

    சூர்யா மீது முழு நம்பிக்கையை ஏற்படுத்திய பின்பு அந்த பெண்களுடன் விடுதியில் அறை எடுத்து உல்லாசமாக இருந்து வந்ததும் அதனை வீடியோவாக செல்போனில் பதிவு செய்துவைத்துக்கொண்டுள்ளார். சுமார் 50க்கும் மேற்பட்ட இளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை செல்போனில் வைத்திருந்த போலீசாருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    பின்னர் இந்த வீடியோவை காண்பித்து அவ்வப்போது பணம் மற்றும் நகையை பறித்து வந்துள்ளார். இது குறித்து வெளியில் சென்னால் தன்னுடைய மானம் போய்விடும் என்ற அச்சத்தினால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் புகார் கொடுக்காமல் விட்டு விட்டுள்ளனர்.

    தற்போது வரை சூர்யா மீது பல்வேறு காவல் நிலையங்களில் 7 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு முன்னதாக கொடுக்கப்பட்ட 6 புகார்களில் போலீசாரிடம் சிக்காமல் தன்னுடைய கைவரிசையை காட்டி வந்த மோசடி மண்ணன் கானத்தூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    Also Read: கைதியிடம் செல்போன்களைத் திருடச் சொல்லி விற்று வந்த சிறைக் காவலர் உட்பட 3 பேர் கைது - சென்னையில் பரபரப்பு

    சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, கோவை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மோசடி மண்ணன் சூர்யாவால் பாதிக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இளம் பெண்களை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னுடைய இச்சைக்கு இனங்கவைத்து ஏமாற்றி பல லட்சங்களையும், சுமார் 100 சவரனுக்கு மேலான தங்க நகைகளையும் மோசடி செய்து வந்துள்ளார் இந்த மோசடி மண்ணன் சூர்யா.

    ரியல் எஸ்டேட் பிசினஸ்

    பெங்களூரில் உள்ள சூர்யாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து கானத்தூர் காவல் நிலையம் வரவைத்து விசாரித்தபோது மாதந்தோறும் எங்களுக்கு பணம் அனுப்புவான் அந்த பணம் ரியல் எஸ்டேட் செய்து சம்பாதிப்பதாக கூறினான் என்றனர். உங்களுக்கு கிடைத்த பணம் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு அவர்களை மிரட்டி பறித்த பணம் என்பதை காவல்துறையினர் சூர்யாவின் பெற்றோர்க்கு கூறினர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சூர்யாவின் தந்தை intelligence bureau (sp) யாக பணிபுரிந்து வருவதாகவும், அவருடைய தாய் பேராசிரியராக பணிபுரிந்து தற்பொழுது ஓய்வுபெற்று வருவதும் தெரிவந்தது. மோசடி செய்து சம்பாதித்த பணத்தை கொண்டு பாதாம், பிஸ்தா, முந்திரி என வாங்கி சாப்பிட்டு உடலை கட்டுடன் மேனியாக வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இவரிடம் சிக்கிய இளம்பெண் ஒருவர் ரத்தப்போக்கு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். சூர்யா மீது மோசடி உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த கானத்தூர் போலீசார் அவரிடமிருந்து கார் மற்றும் 3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    நாட்டில் உளவு பார்க்கும் உயரிய வேலையை செய்யும் தந்தை தன் மகன் செய்யும் செயல் குறித்து உளவு பார்க்க தவறியதால் மகன் மோசடி மண்ணனாக சிறைக்கு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதை போல பெண்களுடன் உல்லாசமாக இருப்பதை வெளியே சொல்லமாட்டார்கள் என்று எண்ணி சொகுசாக தமிழகத்தில் வளம்வந்துகொண்டிருந்த சூர்யா தற்பொழுது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

    செய்தியாளர்: ப.வினோத்கண்ணன் 



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: