சென்னையைச் சேர்ந்த பெண் ஆட்டோ ஓட்டுநர் இரவு நேரத்தில் பெண்களுக்கும், வயதானவர்களுக்கும் இலவசமாக ஆட்டோ ஓட்டி உதவிவருகிறார். அவருக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.
இன்றைய அவசர உலகின் ஒவ்வொருவரும் தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்கே நேரம் இல்லாமல் ஓடிவருகின்றனர். இந்தச் சூழலில் சென்னையைச் சேர்ந்த பெண் ஆட்டோ ஓட்டுநரின் மனித நேயம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. சென்னையைச் சேர்ந்தவர் ராஜி. அவருக்கு வயது 50. அவர், பி.ஏ படித்துள்ளார்.
இருப்பினும், அவருக்கு படிப்பு ஏற்றவேலை கிடைக்காத சூழலில் வேறு வழியின்றி ஆட்டோ ஓட்டும் தொழிலுக்கு வந்தார். கடந்த 23 ஆண்டு காலமாக ஆட்டோ ஓட்டும் தொழில் செய்துவருகிறார். இதுகுறித்து ஏ.என்.ஏ ஊடகத்திடம் பேசிய அவர், ‘நான் கடந்த 23 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டும் தொழில் செய்துவருகிறேன்.
இரவு 10 மணிக்குப் பிறகு மாணவிகள், முதிய பெண்களுக்கு இலவசமாக ஆட்டோ ஓட்டுவேன். அவசரகால நேரத்திலும் இலவச பயணம் வழங்குவேன்’ என்று தெரிவித்தார். அவருடைய செயலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டிவருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.