ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பேருந்துநிலையத்தில் வழக்கத்திற்கு மாறாக பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது.
சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை கொண்டாடும் விதமாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 3,000 சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சிறப்பு பேருந்துகள் மூலம் கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்கள் சொந்த ஊர் புறப்பட்டு செல்லும் நிலையில் நள்ளிரவிலும் ஏராளமான மக்கள் சொந்த ஊர் செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்ததால் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட சற்று குறைவாகவே காணப்பட்டது.
பயணிகளின் வருகையை பொருத்து பேருந்துகள் இயக்கப்பட்டதால் பேருந்து நிலையம் வந்த மக்கள் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் மூலம் சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இந்த ஆண்டு தாம்பரம் மற்றும் பூந்தமல்லி பகுதியில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தாம்பரம் ரயில் இருந்து புறப்படும்
திண்டிவனம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள், திருவண்ணாமலை, செஞ்சி ,புதுச்சேரி, கடலூர் சிதம்பரம் பண்ருட்டி நெய்வேலி, வடலூர், காட்டுமன்னார்கோவில், வந்தவாசி சேத்பட் டு போளூர்
பூந்தமல்லி பேருந்து நிலையம்
ஆற்காடு, ஆரணி, வேலூர், குடியாத்தம், திருப்பத்தூர், தர்மபுரி கிருஷ்ணகிரி, ஓசூர்,காஞ்சிபுரம், செய்யாறு,திருவள்ளூர், திருத்தணி, திருப்பதி, பேர்ணாம்பட்டு
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் பேருந்துகள்
புதுச்சேரி,கடலூர், சிதம்பரம், (வழி ஈசிஆர்) திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம் திட்டக்குடி, திருக்கோவிலூர், திருச்சி, சேலம், கும்பகோணம்,
பொதுமக்கள் பேசுகையில், தொடர் விடுமுறை என்பதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும் இருந்தாலும் பொதுமக்கள் கூட்டம் சற்று குறைவாக காணப்பட்டது கூட்டம் நெரிசல் இன்றி சுலபமாக பயணிக்க முடிந்ததாகவும் தெரிவித்தனர்.
வழக்கமாக 2 ஆயிரம் பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்படும் நிலையில், கூடுதலாக 3 ஆயிரம் பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இதனால் பேருந்து இருக்கைகள் நிரம்பும் வரை, ஓட்டுநர்கள் நீண்ட நேரம் காத்திருந்து வாகனத்தை எடுத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ayudha poojai, Koyambedu