ஷாப்பிங் செய்ய தி.நகர் ரங்கநாதன் தெருவுக்கு வருவோர் கவனத்திற்கு..!

கோப்பு படம்

சனி ஞாயிறு இங்கு வந்தால் சிக்கல்… கூட்டத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை

  • Share this:
சென்னை என்றாலே ரங்கநாதன் தெருவுக்கு வருவது என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து வரும் மக்களுக்கு இந்த தெருவுக்கு வந்து ஷாப்பிங் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.எனவே எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த ரங்கநாதன் தெரு இப்போது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டம் அதிகளவில் வரத் தொடங்கியிருக்கிறது.

இதுகுறித்த தகவல்கள் சென்னை மாநகராட்சிக்கு கிடைத்ததையடுத்து மாந்கராட்சி அதிகாரிகள் அந்த பகுதிகளில் இன்று திடீர் சோதனை நடத்தினர். தொற்று  பாதிப்பு படிப்படியாக குறைந்து கட்டுக்குள் வந்துள்ளதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கூட்டம் இங்கு அதிகளவில் வருவதை கட்டுப்படுத்த அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்

ரங்கநாதன் தெருவில் சென்னை மாநகராட்சி துணை ஆணையர் விசு மகாஜன்,வட்டார துணை ஆணையர் சரண்யா ஹரி மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். சரவணா ஸ்டோர்ஸ்,ஜெயச்சந்திரன் போன்ற பெரும் வணிக வளாகங்களிலும் சிறிய கடைகளிலும் உள்ளே சென்று மக்கள் கூட்டம் உள்ளதா என்பதை ஆய்வு நடத்தினர்.



தற்போது 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுகிறார்களா வெப்ப பரிசோதனை, பொதுமக்கள் மாஸ்க் அணிந்து தனிநபர் இடைவெளியை கடைபிடிக்கிறார்களா என்பதை பார்வையிட்டு வியாபாரிகளின் கருத்துக்களை கேட்டறிந்தனர். மேலும் பல்வேறு அறிவுரைகளை வியாபாரிகளுக்கு அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர்.  அந்த அடிப்படையில் ரங்கநாதன் தெருவுக்கு இன்றும் நாளையும் வருவோர் சில விஷயங்களை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

Also Read : மின்வாரிய உத்தரவை மீறும் மின்வாரிய ஊழியர்கள்?.. முறைகேடாக கணக்கீடு செய்யும் மின் கட்டணம்

மாலை நேரங்களில் 3 மணிக்கு மேல் அதிக அளவில் கூட்டம் இருந்தால் ரங்கநாதன் தெருவுக்கு வருவோரை வழியிலேயே நிறுத்தி அங்கிருந்து அவர்களை வேறு இடங்களுக்கு ஷாப்பிங் செல்வதற்கு திருப்பி அனுப்புவதற்கு காவல்துறை முடிவு செய்துள்ளது. எனவே இந்த பகுதிக்கு வருவோர் முன்கூட்டியே அங்கு கூட்டம் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு வந்தால் சிரமம் இல்லாமல் இருக்க முடியும்.



அது மட்டுமல்லாது முகக்கவசம் அணியவில்லை என்பதை போலீசார் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் அவ்வப்போது கண்காணித்து வருகின்றனர். அவர்கள் மாஸ்க் அணியவில்லை என்றால் அபராதம் கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதுமட்டுமல்லாது அந்த தெருவில் ஏராளமான அளவுக்கு நடைபாதை கடைகள் உள்ளன. நடைபாதையில் உள்ள சிறு சிறு கடைகள் யாரும் வியாபாரம் செய்யக்கூடாது.

கடைகளுக்கு உள்ளே மட்டுமே மக்கள் செல்ல வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் நடைபாதை கடைகளை நம்பி வரவேண்டாம். மேலும் அந்த பகுதிகள் முழுக்க சிறுசிறு சாலையோர உணவு கடைகள் இருக்கும் பழச்சாறு நெல்லிக்காய்,மாங்காய் சுண்டல், ஐஸ்கிரீம் போன்றவை இருக்கும். அந்த கடைகளையும் இரண்டு நாட்களும் வைக்கக்கூடாது என்று மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளதால் அந்த கடைகளில் நீங்கள் நொறுக்குத் தீனி எதையும் வாங்க முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Also Read : கடலூரில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கழுத்தை நெறித்துக் கொன்ற மனைவி

மேலும் குழந்தைகளை எடுத்து வரக்கூடிய நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவர்கள் தயவு செய்து குழந்தைகளை ரங்கநாதன் தெருவுக்கு கொண்டு வரவேண்டாம் என்றும் மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. மிகக் குறுகலான ஒரு பகுதி மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும் .எனவே தங்கள் உடல் நலனை கருத்தில் கொண்டு சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் முண்டியடித்துக் கொண்டு வரக் கூடிய கூட்டத்தை தவிர்த்தால் பலருக்கும் நோய் தொற்று பரவாமல் இருக்க வாய்ப்புள்ளது.

ஆடி மாதம் என்பதாலும் கூட்டம் அதிகளவில் வரும் என்பதால் இனிமேல் இந்த பகுதியில் இருக்கக்கூடும் என்பதை மக்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ரங்கநாதன் தெரு மட்டுமல்லாது மக்கள் அதிகம் கூடும் 43 இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தியாகராயநகர் புரசைவாக்கம், பாடி போன்ற இடங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read : தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும்... 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை ஆணையர் சரண்யா அபராதம் வசூலிப்பது மட்டுமே அரசின் நோக்கம் இல்லை. பொதுமக்கள் பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென கேட்டுக்கொண்டார். மக்களுக்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாநகராட்சி செய்து வருவதாகவும் சரண்யா தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: