முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஏரியாவுல யார் கெத்து.? கடையில் புகுந்து வாலிபரை வெட்டிய கும்பல்

ஏரியாவுல யார் கெத்து.? கடையில் புகுந்து வாலிபரை வெட்டிய கும்பல்

வாலிபருக்கு அரிவாள் வெட்டு

வாலிபருக்கு அரிவாள் வெட்டு

முன்விரோதம் காரணமாக விஷ்ணுவை கொலை செய்ய முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சென்னை அருகே வாலிபரை வெட்டிய வழக்கில் இளம் சிறார் உடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையை அடுத்த  நன்மங்கலத்தை சேர்ந்தவர் விஷ்ணு ப்ரியன்(21).  இவர் கோவிலம்பாக்கம், சத்யாநகர் 3வது தெருவில் உள்ள பிளைவுட் கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தபோது 5பேர் கொண்ட கும்பல் ஒன்று விஷ்ணுவை சரமாரியாக வெட்டி தப்பியோடியது. பலத்த காயங்களுடன் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் விஷ்ணு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Also Read: நண்பன் மனைவியுடன் பழக்கம்.. நிர்வாண வீடியோ.. மதுவிருந்து - இரட்டை கொலை சம்பவத்தின் பகீர் பின்னணி

இச்சம்பவம் குறித்து  வழக்குப்பதிவு செய்த போலீசார் கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்த சோலை ராஜா(19),  சந்தோஷ்குமார்(20),  சக்திவேல்(19),  ஆதம்பாக்கத்தை சேர்ந்த மணிமாறன்(19),  18-வயதுடைய இளம்சிறார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.  விசாரணையில்  ஏரியாவில் யார் செல்வாக்கு மிக்கவர் என்பது தொடர்பாக இருதரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததும் அதன் தொடர்ச்சி விஷ்ணுவை கொலை முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Also Read: UPS-ல் தீப்பிடித்து விபத்து.. கோவையில் தாய், 2 மகள்கள் உயிரிழந்த சோகம்

கைதான ஐந்து பேரில் நான்கு பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்றொருர் இளம்சிறார் என்பதால் நீதிமன்றம் உத்தரவின் பேரில் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பிவைத்தனர்.

செய்தியாளர்:  ப.வினோத்கண்ணன்

First published:

Tags: Attempt murder case, Chennai, Chennai Police