ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கோடை விடுமுறைக்கு குழந்தைகளுடன் வண்டலூர் உயிரியல் பூங்கா செல்ல திட்டமா..? முதல்ல இதை படிங்க...

கோடை விடுமுறைக்கு குழந்தைகளுடன் வண்டலூர் உயிரியல் பூங்கா செல்ல திட்டமா..? முதல்ல இதை படிங்க...

vandaloor zoo; அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் தொற்று காரணமாக மூடப்பட்ட ஏழு பார்வையாளர்கள் காணும் இடங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது.

vandaloor zoo; அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் தொற்று காரணமாக மூடப்பட்ட ஏழு பார்வையாளர்கள் காணும் இடங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது.

vandaloor zoo; அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் தொற்று காரணமாக மூடப்பட்ட ஏழு பார்வையாளர்கள் காணும் இடங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிறுவர் பூங்காவிற்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ஆசியாவில் மிகப்பெரிய உயிரியல் பூங்காவில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் சராசரியாக 20 லட்சம் பார்வையாளர்கள் வருகை புரிகின்றனர். 180 வகையான 2,500 எண்ணிக்கையிலான வன உயிரினங்கள் பராமரிக்கப்படுகின்றன.

இப்படி தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொது மக்கள் மட்டுமின்றி சென்னை வரக்கூடிய அனைவருமே சுற்றுலா செல்லக்கூடிய இடமாகவும் உள்ளது.

வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் அதிக அளவிலான பொதுமக்கள் வருகை தருகின்றனர். தொடர் விடுமுறை மற்றும் தீபாவளி, கிறி்ஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை தினங்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டுக்கு மத்திய அரசு காரணமா? அண்ணாமலை பதில்

இதேபோல், கோடையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதால் ஏப்ரல், மே மாதங்களிலும் அதிக அளவிலான பொதுமக்கள் வருகை தருவது வழக்கம்.

இந்நிலையில், வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிறுவர் பூங்காவிற்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் தொற்று காரணமாக மூடப்பட்ட ஏழு பார்வையாளர்கள் காணும் இடங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பாம்புகள் இருப்பிடம், ஊர்வன இரவு விலங்குகள் இருப்பிடம் மற்றும் சிறுவர் பூங்கா ஆகியவை முதல் கட்டமாகத் திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இடங்களில் ஒன்றான சிறுவர் பூங்கா வார நாட்களில் மட்டும் திறந்து இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் சிறுவர் பூங்காவிற்கு அனுமதி இல்லை” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Chennai, Vandaloor zoo