Home /News /tamil-nadu /

வீக் எண்டில் வண்டலூர் உயிரியல் பூங்கா செல்ல திட்டமா? அப்ப கண்டிப்பா இதை படிங்க!

வீக் எண்டில் வண்டலூர் உயிரியல் பூங்கா செல்ல திட்டமா? அப்ப கண்டிப்பா இதை படிங்க!

வண்டலூர் பூங்காவுக்கு வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் அதிக அளவிலான பொதுமக்கள் வருகை தருகின்றனர்.

வண்டலூர் பூங்காவுக்கு வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் அதிக அளவிலான பொதுமக்கள் வருகை தருகின்றனர்.

வண்டலூர் பூங்காவுக்கு வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் அதிக அளவிலான பொதுமக்கள் வருகை தருகின்றனர்.

    வண்டலூர் உயிரியல் பூங்கா 20-ம் தேதி ஞாயிறன்று மதியம் 1 மணி வரை மூடப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா ஆசியாவில் மிகப்பெரிய உயிரியல் பூங்காவில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் சராசரியாக 20 லட்சம் பார்வையாளர்கள் வருகை புரிகின்றனர். 180 வகையான 2,500 எண்ணிக்கையிலான வன உயிரினங்கள் பராமரிக்கப்படுகின்றன.

    இப்படி தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொது மக்கள் மட்டுமின்றி சென்னை வரக்கூடிய அனைவருமே சுற்றுலா செல்லக்கூடிய இடமாகவும் உள்ளது.

    வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் அதிக அளவிலான பொதுமக்கள் வருகை தருகின்றனர். தொடர் விடுமுறை மற்றும் தீபாவளி, கிறி்ஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் தினங்களில் உள்ளிட்ட பண்டிகை தினங்களில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

    இதேபோல், கோடையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதால் ஏப்ரல், மே மாதங்களிலும் அதிக அளவிலான பொதுமக்கள் வருகை தருவது வழக்கம்.

    Also read... குற்றவாளியை நீதிமன்றத்திற்கு கூட்டிச் செல்லும் வழியில் ஓய்வெடுத்த போலீசார் - கைவிலங்குடன் கைதி தப்பியோட்டம்

    இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா வரும் 20ம் தேதி ஞாயிறன்று மதியம் 1 மணி வரை மூடப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக பூங்கா நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், நிர்வாக காரணங்களுக்காக அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வரும் ஞாயிற்றுக்கிழமை (20.03.2022) அன்று மதியம் 1.00 மணி வரை பார்வையாளர்களுக்கு மூடப்படுகின்றது. மதியம் 1.00 மணிக்கு பிறகு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Vandaloor zoo

    அடுத்த செய்தி