• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தீபாவளிக்கு சென்னையிலிருந்து சொந்த ஊர் போறீங்களா? அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க...

தீபாவளிக்கு சென்னையிலிருந்து சொந்த ஊர் போறீங்களா? அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க...

 தீபாவளிக்கு சென்னையிலிருந்து சொந்த ஊர் போறீங்களா? அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க...

தீபாவளிக்கு சென்னையிலிருந்து சொந்த ஊர் போறீங்களா? அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க...

நவ.1 முதல் 3 வரை சென்னையில் 6 இடங்களில் இருந்து தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

  • Share this:
    தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக 16 ஆயிரத்து 540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தீபாவளியையொட்டி 20,334 அரசு பேருந்துகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், கூடுதலாக 3,506 சிறப்பு பேருந்துகள் சேர்த்து மொத்தமாக 9,806 பேருந்துகள் சென்னையிலிருந்து இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    அதன்படி, ஆந்திரா செல்லும் பேருந்துகள் சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து ஈசிஆர் வழியாக இயக்கப்பட உள்ளன.

    தாம்பரம் மெப்ஸ் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து விக்கிரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சைக்கு பேருந்துகள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை, போளூர், வந்தவாசி, செஞ்சி, பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி, திருப்பதிக்கு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

    சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை, நாகை, வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, நெல்லை, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பிற ஊர்களிலிருந்து மூன்று நாட்களுக்கு 6,734 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. தீபாவளி முடிந்து சென்னை திரும்புபவர்களின் வசதிக்காக நவம்பர் 5ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை வழக்கமாக இயக்கக்கூடிய பேருந்துகளுடன் சேர்த்து 4,319 சிறப்பு பேருந்துகளும், பிற முக்கிய ஊர்களிலிருந்து 5,000 சிறப்பு பேருந்துகள் என ஒட்டுமொத்தமாக 17,719 பேருந்துகளும் இயக்கப்படும். பயணிகள் எண்ணிக்கையை பொறுத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: