Home /News /tamil-nadu /

Exclusive | ஒரே நாள் இரவில் சிங்கார சென்னையை புரட்டிப்போட்ட கனமழை! ‘அறப்போர் இயக்கம்’ ஜெயராம் பகிரும் முக்கிய தகவல்- Explainer

Exclusive | ஒரே நாள் இரவில் சிங்கார சென்னையை புரட்டிப்போட்ட கனமழை! ‘அறப்போர் இயக்கம்’ ஜெயராம் பகிரும் முக்கிய தகவல்- Explainer

அனைத்து நீர்நிலைகளையும் அதன் அதிகபட்ச கொள்ளளவிற்கு மீட்டெடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.

அனைத்து நீர்நிலைகளையும் அதன் அதிகபட்ச கொள்ளளவிற்கு மீட்டெடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.

அனைத்து நீர்நிலைகளையும் அதன் அதிகபட்ச கொள்ளளவிற்கு மீட்டெடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.

கடந்த நவம்பர் 6ஆம் தேதி சில மணிநேரங்கள் பெய்த ஒரு மழை, ஒரே இரவில் ஒரு ஸ்மார்ட் சிட்டியையே சீர்குலைக்கும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நவம்பர் 6ஆம் தேதி இரவு முழுவதும் பெய்த கனமழையால் பெரும்பாலான பகுதிகள் ஸ்தம்பித்தன. மேலும், அப்பகுதியில் உள்ள மக்கள் நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். குறிப்பாக தென்கிழக்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நவம்பர் 6 இரவு முதல் சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது. அதேபோல், சென்னையில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நகரின் பல சுரங்கப்பாதைகள் நீச்சல் குளங்களாக காட்சியளித்தன. மீட்புப் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்றன. மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வலுவடையக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் நாளை தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என கூறியுள்ளது.

சமீப காலமாக, பருவமழை காலங்களில் அபாயகரமான நகரமாக சென்னை பார்க்கப்படுகிறது. இதற்குக் காரணம், ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு முன் ஏரி பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால், மழை பெய்யும் போது மழைநீர் வெளியேற இடமின்றி குடியிருப்புகளை சூழ்ந்துக்கொள்கின்றன. சென்னையில் பெருகி வரும் மக்கள் தொகையால் இன்று பல பகுதிகள் வீடுகளாகவும், உயரமான அடுக்குமாடி குடியிருப்புகளாகவும், தகவல் தொழில்நுட்ப பூங்காக்களாகவும் மாறிவிட்டன. சென்னையில் உள்ள வேளச்சேரி போன்ற சில பகுதிகள் ஏரியை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டதால், மிதமான மழை பெய்தாலும், குறிப்பாக பருவமழை காலங்களில் தண்ணீர் தேங்கும் அபாயம் ஏற்படுகிறது. இது மட்டுமின்றி, காலநிலை மாற்றமும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதுகுறித்து நியூஸ்18 டிஜிட்டல் தளத்திற்கு பேட்டியளித்த அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், சென்னையின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், நகரை எதிர்கால வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கவும் வலுவான political will தேவை. மிக முக்கியமாக, அனைத்து நீர்நிலைகளையும் அதன் அதிகபட்ச கொள்ளளவிற்கு மீட்டெடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும். முதற்கட்டமாக, வருவாய் துறையினர் எல்லைகளைக் குறிப்பிட்டு, அந்த குறிப்பிட்ட எல்லையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அதன் பின்னர் நீர்நிலைகளை மீட்டெடுக்க வேண்டும். ரியல் எஸ்டேட் மற்றும் அரசாங்கமே ஆக்கிரமித்துள்ள பகுதிகளையும் அகற்ற வேண்டும்.

சென்னை


மேலும், ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் இருப்பின், அவர்களை 30 அல்லது 40 கி.மீ., தூரத்திற்கு அல்லாமல், 3 கி.மீ.க்குள் ஒரு ஹவுசிங் போர்டை வீட்டு வசதி வாரியம் உருவாக்க வேண்டும். மேலும், நீர்நிலைகளின் சங்கிலியாக இருக்கும் கால்வாய்களையும் சீரமைக்க அரசு கவனம் செலுத்த வேண்டும். இதனால், கடுமையான மழை மற்றும் கடுமையான வறட்சி சூழ்நிலையிலும் நிலத்தடி நீரை ரீசார்ஜ் செய்வதன் மூலம் இவை உதவும். இதற்கிடையில், சீரற்ற சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடக்கும் நிலையில், மழைநீர் வடிகால் இணைப்புகள் காணாமல் போனது குறித்தும் அரசு கவனம் செலுத்த வேண்டும். Storm water drains-ன் முக்கிய நோக்கம் மழைநீரை அருகிலுள்ள நீர்நிலைகளுக்கு கொண்டு செல்வது மற்றும் அந்த நீர்நிலைகளை எல்லைகளுடன் மீட்டமைக்க உதவும்.

Must Read | மழை வெள்ளத்திற்கிடையே சத்தமின்றி பரவும் டெங்கு! செய்ய வேண்டியது என்ன?

அதுமட்டுமின்றி, அதன் முழு கொள்ளளவை அடைய வழிவகுத்து, பின்னர் வறட்சி ஏற்படும் போது பயன்படுத்த பெரிதும் உதவும். இதனால், ஒரு பக்கம் வெள்ளம் தடுக்கப்பட்டு, மறுபுறம் வறட்சியின் போது இந்த நீர்நிலைகள் நமக்கு உதவுகின்றன. கான்கிரீட் அமைப்பதுதான் மறுசீரமைப்பு என அரசு நினைக்கிறது. ஆனால் அது மறுசீரமைப்பு இல்லை. 40-50 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஆக்கிரமிப்புகளை மீட்க முடியும் என்றால், அது சாத்தியமில்லை. மாறாக, கடந்த 10 ஆண்டுகளுக்குள் பட்டா கொடுக்காமல் பதிவுத்துறையில் லஞ்சம் வாங்கிக்கொண்டு பதிவு செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகளை எளிதாக மீட்க முடியும். மேலும், கடந்த 10 ஆண்டுகளாக ‘லஞ்ச’ பதிவு செய்த சிஎம்டிஏ மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகள் மூலம் பதிவுகளில் நடக்கும் ஊழல் நிச்சயம் குறையும் என ஜெயராம் கூறினார்.

மேலும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைப்பது மிகவும் அவசியம் என்றும் அவர் கூறினார். மழைநீர் நீர்நிலைகளுக்குச் சரியாகச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் வரைபடத்தை மாநகராட்சி வெளிப்படையாக வெளியிட வேண்டும். பின்னர், தேவை ஏற்படும் போது மனித நோக்கத்திற்காக நீர்நிலைகளை பயன்படுத்த முடியும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, சென்னை மாநகராட்சியில் உள்ள 210 குளங்களை அரசு முறையாக பராமரித்து பயன்படுத்த வேண்டும்.
Published by:Archana R
First published:

Tags: Chennai Rain, Chennai rains, Explainer

அடுத்த செய்தி