சென்னை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மாநகராட்சி மேயர் பிரியா, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி வாசிக்க, அதனை உறுப்பினர்கள் பின்தொடர்ந்து கூறினர். அதனை தொடர்ந்து, சொத்துவரி உயர்வு குறித்து பேச,
அதிமுக கவுன்சிலர்கள் மேயரிடம் அனுமதி கேட்டனர்.
அதற்கு அவர், பட்ஜெட் தாக்கலுக்கு பின் நேரம் ஒதுக்கப்படும் என கூறினர். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத அதிமுகவைச் சேர்ந்த சில கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். அதனைத் தொடர்ந்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் :
மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவு இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கவுன்சிலர்களுக்கான வார்டு மேம்பாட்டு நிதி ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.35 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்த பாலினக் குழுக்கள் அமைக்கப்படும்.
70 பள்ளிகளில் இணைய இணைப்பு வழங்க ரூ.1.86 கோடி ஒதுக்கீடூ செய்யப்படும்.
Must Read : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை - பெரம்பலூரில் மின்னல் தாக்கியதில் 2 இளைஞர்கள் பலி
281 மாநகராட்சி பள்ளிகளில் 40 லட்சம் செலவில் கல்விக் கண்காட்சிகள் நடத்தப்படும்.
72 லட்சம் மாணவர்களுக்கு 7.50 கோடி செலவில் சீருடை வழங்கப்படும்.
நிர்பயா நிதி மூலம் 23.66 கோடியில் சானிட்டரி நாப்கின் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளிகளில் 5.47 கோடியில் கண்காப்பு கேமிரா பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டில் மழைநீர் வடிகால், சுகாதாரம், கல்வித் துறை ஆகிய மூன்று விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.