Home /News /tamil-nadu /

எச்.ராஜா ஒரு நல்ல மனிதர் அவருக்கு கவர்னர் பதவி கிடைத்தால் சந்தோஷம் - அண்ணாமலை

எச்.ராஜா ஒரு நல்ல மனிதர் அவருக்கு கவர்னர் பதவி கிடைத்தால் சந்தோஷம் - அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

Annamalai : கேரளா ஆளுநராக எச்.ராஜா வர உள்ளாரா என்பதை குறித்து தனக்கு தெரியாது என்றும் நான் தேர்வுக் குழுவில் இல்லை எனவும் கூறிய பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, இருப்பினும் எச்.ராஜா ஒரு நல்ல மனிதர் என்றும் அவருக்கு ஆளுநர் பதவி கிடைத்தால் சந்தோஷமே எனவும் கூறினார்.

மேலும் படிக்கவும் ...
பாஜக சார்பாக  TNPSCகுரூப் 4 தேர்வுக்கான ஒருநாள் இலவச பயிற்சிக்காக, ‘தாமரை இலவச போட்டித் தேர்வு’ என்ற மையத்தை பாஜக-வின் மாநில தலைவர் அண்ணாமலை சென்னை திருவல்லிக்கேணினியில் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், தமிழக சட்டப்பேரவையில் துணை வேந்தர்கள் மாநில அரசே நியமனம் செய்யும் சட்ட மசோதாவை தயார் செய்து இருக்கிறார். பாஜக இந்த மசோதாவை  அங்கேயே எதிர்த்தது. திமுக அரசு துணை வேந்தர் என்ற பதவியை வியாபாரமாக அவர்களுக்கு பிடித்த நபர்களுக்கும் கொடுக்கும் பதவியாக வைத்து உள்ளது. திமுக இதற்கு முன்பே துணை வேந்தர்களை எந்த அளவிற்கு வியாபாரமாக மாற்றி இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும் என்றார்.

பல நல்ல துணை வேந்தர்களை ஆளுநர் நியமனம் செய்துள்ளார். இருப்பினும் ஆளுநரே எந்த துணை வேந்தர்களையும் நேராக நியமனம் செய்யவில்லை. தேர்வுக் குழுவின் பரிசீலனையிலும் இது நடைபெறுகிறது. இதில் மாநில அரசின் தலையீடும் உள்ளது.
இந்த செயல் திமுக அரசியல் காழ்புணர்ச்சியுடன் இதை நடைமுறை செய்கிறது என்று அண்ணாமலை விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், எச்.ராஜா கேரளா ஆளுநராக வர உள்ளாரா என்பது குறித்து எனக்கு தெரியாது. நான் தேர்வுக் குழுவில் இல்லை.
இருப்பினும் எச்.ராஜா ஒரு நல்ல மனிதர். அவருக்கு கவர்னர் பதவி கிடைத்தால் சந்தோஷமே என்று தெரிவித்தார்.

அமைச்சர்கள் இருக்கும் இடத்தில் ஆளுனருக்கு இடம் அளிக்க வேண்டும் என்று விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் கூறிய விஷயத்திற்கு பதில் அளித்த அண்ணாமலை, ஆளுநர் மாளிகையில் பல்வேறு அரசியல் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவற்றை எல்லாம் விடுதலை சிறுத்தை கட்சி நபர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

அண்ணாமலை


பின்னர் மேடையில் பேசிய அண்ணாமலை, நான் 40 ஆண்டு காலம் அனுபவத்துடன் ஐபிஎஸ் ஆக உள்ளேன் என்று தெரிவிக்கும் நபருக்கும் குரூப் 4 புதிதாக இருக்கும். குரூப் 4 தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் புதிதாக உள்ளன. காலம் வேகமாக மாறிக்கொண்டு வருகிறது. குரூப் 4 தேர்வில் காலி இடங்கள் 7,500 மட்டுமே உள்ளன. ஆனால், எழுதும் நபர்கள் 2 லட்சம் பேர்கள் உள்ளார்கள் என்று நினைப்பது குறுகிய மனப்பான்மை. ஆனால் இந்த பரிட்சையை நீங்கள் முழுமனதுடன் அணுக வேண்டும்.

Read More : விரைவில் அரசியல் சுற்றுப் பயணத்தை தொடங்குவேன் - வி.கே.சசிகலா அதிரடி

இந்த தேர்வை நான் கண்டிப்பாக முடிப்பேன் என்று இப்பொழுதில் இருந்தே மனதில் யோசித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
நீங்கள் எவ்வளவு கஷ்டப்படக்கூடிய பின்புலத்தில் இருந்து வந்தவர்கள் என்று தெரிவித்தாலும், நான் அதை விட கஷ்டப்பட்டும் நபர்களை காண்பிப்பேன். இந்த சிலபஸ் எல்லாராலும் தேர்ச்சி அடையும் அளவிற்கே வடிவமைக்கப்பட்டு உள்ளது. சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிப் பெறுவதே மிக முக்கியமான ஒன்று.

Must Read : பிரேக் என நினைத்து ஆக்சிலேட்டரை அழுத்திய ஓட்டுனர் - சென்னை பீச் ஸ்டேஷன் ரயில் விபத்து விசாரணையில் திடுக்கிடும் தகவல்

நான் போட்டித் தேர்வுக்கு தயாராகும் பொழுது என்னுடன் படித்த மாணவர்கள் TNPSC -யில் தேர்வாகாமல் ஐ.ஏ.எஸ் தேர்வை தேர்ச்சி பெற்றவர்கள் உள்ளார்கள். நீங்கள் குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் பொழுது மற்ற போட்டித் தேர்விக்கும் சேர்த்துத்தான் தயாராக உள்ளீர்கள் என்று கூறினார். மேலும், 4 மணி நேரத்தில் வி.ஜி.பி கடற்கரையில் இருந்து மெரினா கடற்கரை வரை நீந்தி சாதனை புரிந்த சஞ்சனாவை  அண்ணாமலை மேடையில் பாராட்டினார்.
Published by:Suresh V
First published:

Tags: Annamalai, BJP, Governor, H.raja

அடுத்த செய்தி