சென்னை வேளச்சேரியில் உள்ள நட்சத்திர விடுதியில் 44 வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க உள்ள, கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, நக்கீரன் கோபால் மற்றும் பிரக்ஞானந்தா குடும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் இப்படி ஒரு மனிதன் இருக்கிறார் என்று உலகத்திற்கே எடுத்துக்காட்டாக உள்ளார். அதனாலே இந்த நிகழ்ச்சியை தவற விட கூடாது என்ற திருச்சியில் இருந்து இந்த நிகழ்விற்கு சாலை வழியாக வந்துள்ளேன்.
விஸ்வநாதன் ஆனந்தை தோற்கடித்த கார்லசனை இவர் தோற்கடித்தார் என்பது எவ்வளவு பெரிய விஷயம். மேலும், இவர் என்னுடைய மாணவன் என்றார். குழந்தைகளை கண்டிக்காமல் அவர்களின் கவனத்தை மாற்ற வேண்டும் என்று அறிவுரை கூறினார். இந்த சமூகம் சொல்லி கொடுப்பதை மாணவர்கள் பள்ளியில் வெளிப்படுத்துகிறார்கள்.
தொடர்ந்து பேசியவர், பள்ளி கல்வி துறை அமைச்சர் ஆக வேண்டும் என நான் இங்கு வரவில்லை. மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆசையிலேயே இங்கு இந்த பணியில் உள்ளேன். ஆருயிர் நண்பன் உதயநிதி ஸ்டாலின் கூட கூறினார் நடக்கக்கூடிய செஸ் ஒலிம்பியாட் போட்டி அனைவரையும் திரும்பி பார்க்கும் அளவில் இருக்க வேண்டும் என்றார்.
அந்த அளவிற்கு தாயாராகி உள்ளோம். என்னை பொறுத்தவரை என்னுடைய மாணவர்களும் மாணவிகளும் தான் ராஜா ராணி ஏனெனில் எதிர்காலத்தில் அவர்கள் தான் நாட்டை ஆளப்போகிற ராஜா ராணிகள் அவர்களுக்கு சிப்பாய்களாக இருந்து அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம் என்றார்.
Must Read : அட்சய திருதியை நாளில் 18 டன் தங்கம் விற்பனை.. தமிழ்நாட்டில் மட்டும் 9 ஆயிரம் கோடிக்கு விற்பனை எனத் தகவல்
இந்நிலையில், மேடையில் பிரக்ஞானந்தா பேசுகையில், ஒலிம்பியாட் சென்னையில் நடப்பது எனக்கு பெருமையாக உள்ளது. உலக செஸ் போட்டி நடத்த 4 வருடங்கள் ஆகும். ஆனால் 4 மாதத்தில் சென்னையில் நடக்கிறது. எனக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். இதனை ஏற்பாடு செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.