ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில்  பெட்ரோல் குண்டு வீச்சு..

சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில்  பெட்ரோல் குண்டு வீச்சு..

கமலாயத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

கமலாயத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

மது பாட்டில்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில்  நள்ளிரவில்  பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  சென்னை தி.நகர் பகுதியில் பா.ஜ.கவின் தலைமை அலுவலகமான கமலாலயம் உள்ளது. நேற்று நள்ளிரவில் பாஜக தலைமை அலுவலத்தில் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீஸார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.   மது பாட்டில்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.

  பாஜக அலுவலகத்தின் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் எந்த சேதமும் ஏற்படவில்லை. கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் கேள்விப்பட்டு பா.ஜ.க கட்சி தொண்டர்கள் அங்கு குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டு வீசியதை கண்டித்து தொண்டர்கள் கண்டன முழக்கம் எழுப்பி வருகின்றனர். நள்ளிரவில் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Annamalai, BJP, Bomb, Chennai, Chennai Police, Crime News