• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னையில் தாங்கள் பராமரித்து வந்த இடத்தை அபகரிக்க முயற்சி; தீக்குளிக்க முயன்ற பெண்கள்!

சென்னையில் தாங்கள் பராமரித்து வந்த இடத்தை அபகரிக்க முயற்சி; தீக்குளிக்க முயன்ற பெண்கள்!

 சென்னையில் இடம் பிரச்சனை காரணமாக மூன்று பெண்கள் தீக்குளிக்க முயற்சி!

சென்னையில் இடம் பிரச்சனை காரணமாக மூன்று பெண்கள் தீக்குளிக்க முயற்சி!

குற்றம்சாட்டபட்டவர்களிடம் கேட்டபோது இந்த இடத்தை மகாத்மா காந்தி பொதுநல பாதுகாப்பு சங்கம் பாதுகாத்து வருகிறது என்றனர்.

  • Share this:
    சென்னை தரணியில் இடம் பிரச்சனை காரணமாக மூன்று பெண்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சென்னை தரமணி மகாத்மா காந்தி நகர், அண்ணா தெருவில் வசந்தகுமார், கிருஷ்ணகுமார் சகோதரர்கள் குடும்பத்தார் வருகின்றனர். இவர்களின் வீட்டிற்கு எதிரே உள்ள 900 சதுரடி நிலம் சகோதர்களின் தந்தை காலத்திலிருந்து இவர்கள் பராமறித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பொதுநல சங்கத்தை சேர்ந்த அண்ணாமலை, சுப்பிரமணி உள்ளிட்ட 5 பேர் இந்த காலி இடத்தை அபகரிக்கும் நோக்கத்தில் கடந்த சில மாதங்களாகவே முயன்று வருவதாகவும், தங்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் இதுபோன்று பிரச்சனை செய்து வருவதாகவும் சகோதரர்கள் குடும்பத்தார் குற்றம்சாட்டுகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மகாத்மா காந்தி பொதுநல பாதுகாப்பு சங்கம் சார்பில் காலி இடத்தின் அருகில் சென்றுள்ளனர். இதை பார்த்த சகோதர்களின் குடும்பத்தார் அங்கு குவிந்தனர். ஒரு கட்டத்தில் வசந்த்குமார் மனைவி லில்லி, கிருஷ்ணகுமார் மனைவி கேத்ரின் மற்றும் மகள் கல்பனா ஆகிய மூவரும் தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

    இச்சம்பவத்தை பார்த்த அவர்களுடைய உறவினர்கள் அவர்கள் கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை பிடுங்கிய பின்னர் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.

    இதுகுறித்து குற்றம்சாட்டபட்டவர்களிடம் கேட்டபோது இந்த இடத்தை மகாத்மா காந்தி பொதுநல பாதுகாப்பு சங்கம் பாதுகாத்து வருகிறது என்றும் அந்த பகுதி உருவானதிலிருந்து பொதுநல சங்கம்தான் அந்த இடத்தை தனிநபர் யாரும் அபகரிக்காமல் பாதுகாத்து பராமறித்து வருகிறது. இந்த இடம் யாருக்கும் சொந்தமான இடம் இல்லை அரசுக்கு சொந்தமான இடம் என்று தெரிவித்தனர்.

    Also read: என்னது Audi A6 சொகுசு கார் இல்லையா?.. கொதித்த நெட்டிசன்கள்!! கூகுளில் அதிகம் தேடப்படும் காரின் விலை..

    மேலும் இந்த இடத்தில் அரசு சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நமூக நலக்கூடம் மற்றும் ரேஷன் கடை கட்டித்தரும்படி வேளச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானாவிடம் மகாத்மா காந்தி பொதுநல பாதுகாப்பு சங்கம் சார்பில் சங்க தலைவர் சுப்பிரமணி, துணை தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மனு கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

    Also read: திமுக நிர்வாகிகள் யாரும் தடுப்பூசி டோக்கன் வினியோகத்தில் ஈடுபட மாட்டார்கள்: அமைச்சர் சக்கரபாணி

    தங்கள் மீது பொய்யான ஒரு குற்றம்சாட்டை முன்வைக்கிறார்கள். அவர்கள்தான் அரசு இடத்தை அபகரிக்க முயற்சிக்கிறார்கள் என்று கூறிய அவர்கள் தங்கள் மீது சாட்டப்பற்ற குற்றம் பொய்யானது என்றும் நாங்கள் பொதுமக்களின் நலன் கருதியே இந்த இடத்தில் அரசு சார்ந்த கட்டிடம் கட்டிதர சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என தெரிவித்தனர்.

    இருதரப்பிலிருந்து தரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் இதுதொடர்பாக வட்டாட்சியர் மற்றும் வருவாய்துறையினர்க்கு பரிந்துறை செய்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: