சென்னையில் உள்ள ஓமந்தூராத் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 'அம்மா' முழு உடல் பரிசோதனை மையம் என்ற பெயர் அதிநவீன முழு உடல் பரிசோதனை மையம் என்று மாற்றப்பட்டுள்ளது.
அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் 2016ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது.ப்அம்மா கோல்டு, அம்மா டைமண்ட், அம்மா பிளாடினம், அம்மா பிளாடினம் பிளஸ் என நான்கு வகை பரிசோதனை பேக்கேஜ்கள் உள்ளன.
ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் சமீபத்தில் கர்பிணி பெண்களுக்கான பரிசோதனைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ள மையத்தின் பெயர் ' அம்மா முழு உடல் பரிசோதனை மையம்' என்பதிலிருந்து 'அதிநவீன முழு உடல் பரிசோதனை மையம்' என்று மாற்றப்பட்டுள்ளது.
ஓமந்தூராரில் உள்ள மையத்தில் அதிநவீன பரிசோதனை கருவிகள் மற்றும் வசதிகள் இருப்பதால் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இன்னமும் அம்மா முழு உடல் பரிசோதனை மையம் என்றே இந்த மையம் அழைக்கப்படுகிறது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.