அம்மா உணவகத்தில் புகுந்து திமுகவினர் தாக்குதல் - ஜெயக்குமார் கண்டனம்

அம்மா உணவகத்தில் புகுந்து திமுகவினர் தாக்குதல்  -  ஜெயக்குமார் கண்டனம்

தாக்குதல் வீடியோ

அம்மா உணவகத்தை சூறையாடிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார்.

  • Share this:
    சென்னையில் அம்மா உணவகம் மீது தாக்குதல் நடத்தி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் திமுக துண்டுடன் அடையாளம் தெரியாத சில நபர்கள் அம்மா உணவகம் மீது தாக்குதல் நடத்தி அங்கு வைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதா படம் பொறித்த பேனரை அடித்து உடைத்தனர்.

    இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி கடும் கண்டனம் எழும்பி உள்ளது. அம்மா உணவகம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அம்மா உணவகம் மீது தாக்குதல் நடத்தும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, அம்மா உணவகத்தை சூறையாடிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன் என்றுள்ளார்.



    அவர் தனது ட்விட்டரில், ”ஏழை எளிய மக்களின் பசியை போக்கிய அம்மா உணவகம் இன்று சில சமூக விரோதிகளால் சேதப் படுத்தப்பட்டது மிகுந்த கண்டனத்திற்குரியது..மழை வெள்ள காலம்,கொரோனா கால ஊரடங்கின் போதும் அனைத்து மக்களுக்கும் உணவளித்த அம்மா உணவகத்தை சூரையாடிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்” என்றுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், சென்னை முகப்பேர் கிழக்கு ஜேஜே நகர் பகுதியில், திமுகவினர் மதுரவாயல் தொகுதியில் வெற்றி பெற்றதற்காக நன்றி தெரிவித்து விட்டு நடந்து சென்ற போது அவ்வழியில் இருந்த அம்மா உணவகத்தில் இருந்த பெயர் பலகை வெளியே எடுத்து வந்து சாலையில் வீசி   சென்றுள்ளனர். இனி அம்மா உணவகம் என்ற பெயர்ப் பலகை தொங்க விடக்கூடாது என அங்கிருந்த ஊழியர்களை எச்சரித்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Published by:Vijay R
    First published: