சென்னையில் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய வரிசையில் காத்திருக்கும் ஆம்புலன்ஸ்கள்!

அம்பத்தூர் எரிவாயு தகன மேடை

இதன் காரணமாக மயனாத்தின் முன் பகுதியில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

 • Share this:
  அம்பத்தூர் மின் மையானத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

  தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனையில் போதிய படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் இல்லாததால் மருத்துவமனை வாசலிலேயே சிகிச்சைக்காக ஏராளமானோர் ஆம்புலன்சில் காத்திருக்கும் காட்சிகளை தினந்தோறும் பார்த்து வருகிறோம்.

  உயிர் பிழைக்க மருத்துவமனைக்கு செல்லும் போது தான் இந்த நிலை என்றால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கும், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

  அந்தவகையில், சென்னை அம்பத்தூரில் உள்ள மாநகராட்சி மின் மயானத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு உறவினர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மயனாத்தின் முன் பகுதியில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

  ஒரு உடலை தகனம் செய்வதற்கு சுமார் 2 மணி முதல் 3 மணி நேரம் ஆகிறது என உறவினர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை ஏற்றிச்செல்லும் ஆம்புலன்ஸ்கள் சுடுகாட்டின் முன்பே நிற்கிறது. இந்த உடல்களை தகனம் செய்ய கூடுதல் வசதிகள் செய்து தர வேண்டும் என்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

  பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று திருவேற்காடு, வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளுக்கு உயிரிழந்தவர்களின் உடல்களை எடுத்துச் சென்று அங்கு உள்ள மின் மயானங்களில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்பத்தூர் திமுக எம்எல்ஏ ஜோசப் சாமுவேல் தெரிவித்துள்ளார்.

  செய்தியாளர் - கண்ணியப்பன்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: