முகப்பு /செய்தி /தமிழ்நாடு / அம்பத்தூரில் ரவுடிகள் அட்டகாசம்.. பேக்கரி ஊழியரை பீர் பாட்டிலால் தாக்கி அட்டூழியம்

அம்பத்தூரில் ரவுடிகள் அட்டகாசம்.. பேக்கரி ஊழியரை பீர் பாட்டிலால் தாக்கி அட்டூழியம்

அம்பத்தூர்

அம்பத்தூர்

அம்பத்தூரில் ரவுடிகள் பீர் பாட்டிலால் தாக்கியதில் காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஒயின்ஷாப்பில் ரவுடிகள் அப்பாவி இளைஞர்களை பீர் பாட்டில் கொண்டு தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் விநாயகம் ( வயது 21) இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் தங்கி அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் எதிரே உள்ள செல்வம் பேக்கரி கடையில் பணியாற்றி வருகிறார். இவர் பணிபுரியும் கடையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் அருகில் இருக்கக்கூடிய அரசு மதுபான கடையில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அப்பொழுது அந்த மதுபான கடையில் மது அருந்தி விட்டு வந்த போதை ஆசாமிகள் விநாயகத்திடம் வீண் தகராறு செய்துள்ளனர்.

இதனையடுத்து வீண் தகராறு செய்தவர்களை விநாயகம் எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் இருவர் விநாகயகத்தை பீர் பாட்டிலை கொண்டு  சராமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் மதுபான பாரில் மூட்டைகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பீர் பாட்டில்களை எடுத்து அவர் தலையிலே அடித்துள்ளனர். இதில் காயமுற்ற விநாயகம் மண்ணூர்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

Also Read:  13 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழப்பு.. கொட்டும் மழையில் பொதுமக்கள் போராட்டம்

இது குறித்து விநாயகம் அளித்த புகாரின் பேரில் அம்பத்தூர் எஸ்டேட் காவல் துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் நேற்று முன் தினம் மாலை நடைப்பெற்றுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

அதில் மதுபான பாரில் கழிவறைக்கு சென்று விட்டு திரும்பும் விநாயகத்தை போதை ஆசாமிகள் இருவரும் வீண் தகராறு செய்வதும் மஞ்சள் சட்டை அணிந்து உள்ள நபர் விநாகயகத்தை அடித்து கீழே தள்ளுவதும் பின்னர் எதற்காக அடித்தாய் என விநாயகம் கேட்கும் பொழுது இருவரும் சேர்ந்து சராமாரியாக தாக்கி பீர் பாட்டில்களால் தாக்கக்கூடிய காட்சிகளும் பதிவாகியுள்ளது.

Also Read:  கடலூர் திமுக எம்பி தலைமறைவு - கொலை வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி போலீஸ்!

முதல் பாட்டில் தலையில்படாமல் தப்ப அடுத்தது இரண்டு பாட்டில்களால் தலையில் அடித்து விநாயகத்தை ஓட ஓட அடிக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளது . முதற்கட்ட விசாரணையில் மங்களாபுரத்தை சேர்ந்த நித்யவேல் மற்றும் அவனைது கூட்டாளி இருவரும் சேர்ந்து தாக்கியதும்,  நித்யா மீது திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது.போலீசார் தொடர்ந்து அவர்களை தேடி வருகின்றனர்.

செய்தியாளர்: கன்னியப்பன் ( அம்பத்தூர்)

First published:

Tags: Beer, Crime News