கணவரின் தவறான பழக்கம்.. எல்லைமீறிய செல்போன் பேச்சு - தாய் மகள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை

சென்னையில் தற்கொலை செய்துக்கொண்ட தாய் மகள்

கணவர் வேறு ஒரு பெண்ணுடன் செல்போனில் பேசி வந்ததை கண்டித்த தகராறில் தாய் மகள் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பாடி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    கணவர் வேறு ஒரு பெண்ணுடன் செல்போனில் பேசி வந்ததை கண்டித்ததில் தகராறு கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு  இருந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தாய் மகள் என இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை அம்பத்தூர் அடுத்த பாடி கலைவாணர் நகர்  சேர்ந்தவர்கள் அசோக் ராஜபாண்டி - ராஜலட்சுமி தம்பதி. இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகள் இருந்தார். அசோக் அந்தப்பகுதியில் சொந்தமாக உணவகம் நடத்தி வருகிறார். சென்னையில் சொந்த வீட்டில் வசிந்து வந்தனர். அசோக் ராஜபாண்டிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. செல்போன் உரையாடல் மூலம் ராஜலட்சுமி இதை உறுதிசெய்துள்ளார்.

    Also Read:  மாயமான இடுக்கி பெண்.. சமையலறையில் சடலமாக கண்டெடுப்பு - கேரளாவில் நடந்த பயங்கரம்

    இதுகுறித்து கணவரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதன்காரணமாக இருவருக்கும் இடையே வீட்டில் அடிக்கடி தகராறு நடந்துள்ளது. கணவன் - மனைவி இடையே கொஞ்ச நாள்களாக பேச்சுவார்த்தை இல்லை. ராஜபாண்டி தன் மகளிடம் மட்டுமே பேசி வந்துள்ளார். இருப்பினும் மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ராஜலெட்சுமி தனது மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் தூக்கில் தொங்கிய இருவரையும் மீட்டு அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள்  இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

    Also Read:  மருமகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த மாமனார்.. நீதிகேட்கும் இளம்பெண்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதுகுறித்து ஜேஜேநகர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த போலீஸார் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் மகள் இருவரும் வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    செய்தியாளர்: கன்னியப்பன் 



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: