• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னை அம்பத்தூரில் கடத்தப்பட்ட குழந்தை.. 4 மணி நேரத்தில் நாக்பூரில் மீட்பு - நடந்தது என்ன?

சென்னை அம்பத்தூரில் கடத்தப்பட்ட குழந்தை.. 4 மணி நேரத்தில் நாக்பூரில் மீட்பு - நடந்தது என்ன?

கடத்தப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்பு

கடத்தப்பட்ட குழந்தை பத்திரமாக மீட்பு

பணத்திற்காக குழந்தையை கடத்தியதாக நாக்பூரில் பிடிப்பட்ட இளைஞர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

  • Share this:
    சென்னை அம்பத்தூரில் கடத்தப்பட்ட குழந்தையை புகாரளித்த நான்கு மணி நேரத்தில் மீட்ட போலீஸார்.

    பிஹார் மாநிலம் அமீர் துர்காபூர் பகுதியை சேர்ந்த சேர்ந்தவர்கள் மிதிலேஷ் குமார், துர்காதேவி தம்பதி. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். மூத்த மகன் விஷ்ணு (வயது 5)   , இளையமகன் ஷியாம் (வயது 3). இந்த தம்பதியினர் அம்பத்தூர் பகுதியில் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் குடியிருக்கும் வீட்டின் மேல்தளத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த  சிவக்குமார் (23), மோனு (21) ஆகியோர் தங்கியுள்ளனர். மிதிலேஷ் குமார்  மற்றும் அவரது மனைவி கூலித் தொழிலாளர்கள் பட்டரவாக்கத்தில்  உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர்.

    குழந்தைகள் இருவரும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.  குழந்தை தனியாக இருப்பதை அறிந்த மேல்தளத்தில் இருந்த இளைஞர்கள் இருவரும் குழந்தைக்கு உணவு வாங்கிக் கொடுப்பது சாக்லெட் வாங்கி கொடுப்பது ஜூஸ் வாங்கி கொடுத்து பழக்கப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் 18 ம் தேதி மாலை 5.30 மணியளவில் மிதிலேஷ் குமார் மற்றும் அவரது மனைவி துர்காதேவி பணி முடித்து  வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவரது இளையமகன் சியாம் காணவில்லை. இது குறித்து அவரது மூத்த மகன் விஷ்ணுவிடம் கேட்டபோது மேல் தளத்தில் குடியிருக்கும் சிவக்குமார் மட்டும் மோனு ஆகியோர்கள் சாக்லேட் ,பிஸ்கட் வாங்கி கொடுத்து வெளியே அழைத்துச் சென்ற தகவலை கூறியுள்ளான் சிறுவன்.

    Also Read:  தாம்பரத்தில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்து - புதுமாப்பிள்ளை உட்பட 3 பேர் உயிரிழப்பு

    இதுதொடர்பாக அக்கம் பக்கம் சென்று பார்த்த போது குழந்தை இல்லாததை உணர்ந்த பெற்றோர்கள் பட்டரவாக்கத்தில் தேடி பார்த்து அங்கு இல்லாததால் பின்பு சென்ட்ரல் மற்றும் பெரம்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு தேடி பார்த்துள்ளனர். குழந்தை கிடைக்காததால்  19 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு அம்பத்தூர் தொழிற்பேட்டை  காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    புகாரை ஏற்று வழக்கு பதிவு செய்து தொழிற்பேட்டை காவல் துறையினர் உடனடியாக அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் காமராஜ் அவர்களுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து  உடனடியாக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை செய்தபோது மேல் வீட்டில் தங்கியிருந்த சிவக்குமார் ,மோனு  ஆகியோர் குழந்தையை கடத்தியது உறுதியானது.  இதுகுறித்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே மத்திய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டது.

    Also Read: கணவனால் கைவிடப்பட்ட 2வது மனைவி பச்சிளம் குழந்தையுடன் முதல் மனைவி வீட்டின் முன்பு தர்ணா

    கடத்தல்காரர்கள் சென்றடையும்  ரயில் நிலையமும் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பேரில் உடனடியாக நாக்பூர் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.  தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலிருந்து மதியம் 1 மணியளவில் இளைஞர்கள் 2 பேரையும் பிடித்த ரயில்வே போலீஸார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். போலீஸாரின் விசாரணையில் குழந்தையை கடத்தியதை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் இருந்த குழந்தையும் மீட்கப்பட்டது.

    இதனையடுத்து அம்பத்தூர் தொழிற்பேட்டை உதவி ஆய்வாளர்கள் ஜெகநாதன் , இளங்கோ, நாட்டாளமை உள்ளிட்ட காவலர்கள் விமானம் மூலம் நாக்பூர் சென்று குற்றவாளிகள் இருவரையும் கடத்தப்பட்ட குழந்தையையும் சென்னைக்கு மீட்டு வந்தனர்.இந்நிலையில் குழந்தையை கடத்தி அவர்களை கைது செய்து குழந்தையை மீட்ட காவலர்களை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வெகுவாக பாராட்டினார்.

    பணத்திற்காக குழந்தையை கடத்தியதாக இளைஞர்கள் கூறியுள்ளனர். ஆதார் எண்  மூலம் ரயில் டிக்கெட் முன் பதிவு செய்து குழந்தை கடத்தியது விசாரணையில் தெரியவந்தது.அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் 4 மணிநேரத்தில் குழந்தையை மீட்டு  குற்றவாளிகள் 2 பேரை கைது செய்து  நீதிமன்றத்தில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

    செய்தியாளர்: கன்னியப்பன் 

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: