முகப்பு /செய்தி /தமிழ்நாடு / Crime News | மது வாங்கித் தராததால் ஆத்திரம்... கல்லூரி மாணவனை கடத்தி சரமாரியாக தாக்கிய கும்பல்

Crime News | மது வாங்கித் தராததால் ஆத்திரம்... கல்லூரி மாணவனை கடத்தி சரமாரியாக தாக்கிய கும்பல்

மாணவனை தாக்கிய மதுபிரியர்கள்

மாணவனை தாக்கிய மதுபிரியர்கள்

TASMAC | பைபாஸ் சாலையை ஒட்டிய சர்வீஸ் சாலை பகுதியில் 4 பேர் சேர்ந்து ஒருவரை தாக்கும் பகீர் CCTV காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மது வாங்கித் தராததால் மாணவனை டாஸ்மாக் பாரிலிருந்து கடத்தி பயங்கர தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை அம்பத்தூர் தொழிற்பேட்டை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சாய்குமார் (20). இவர் மதுரவாயலில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பி.காம் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று சாய்குமார், தனது 3 நண்பர்களுடன் அம்பத்தூர் தொழிற்பேட்டை, 3வது பிரதான சாலையில் உள்ள அரசு மதுபானக்கடையில்  மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு இவர்கள் அருகில் 4 பேர் வந்து மது அருந்த வந்துள்ளனர்.

அப்போது அவர்களில் ஒருவர் சாய்குமாரிடம் மது வாங்கி தருமாறு மிரட்டியுள்ளார். இதனையடுத்து அவர் சக மாணவர்களுக்கு கைப்பேசி மூலமாக தகவல் கொடுத்துள்ளார்.

பின்னர், மதுப்பான கடைக்கு  வந்த ஸ்ரீபெரும்புதூர் திரவுபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சூர்யா (19) என்பவர் இரு மாணவர்களுடன் வந்துள்ளார். அப்போது மது வாங்கி தர கேட்ட கும்பல் சூர்யாவை பிடித்து கொண்டு மது வாங்கி தந்தால் தான் உன்னை விடுவேன் எனக் கூறி அவரை அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் நடுவில் அமரவைத்து கடத்தி சென்றுள்ளனர்.

பின்னர் அந்த கும்பல் சூர்யாவை சரமாரியாக பிளாஸ்டிக் பைப்பால் தாக்கியுள்ளனர்.இதில் சூர்யாவுக்கு கை கால்,மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டது. பின்னர் செல்போனை பறித்து கொண்டு சூர்யாவை மதுரவாயல் புறவழிச்சாலையில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர்.

புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் ஆய்வாளர் மல்லிகா தலைமையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் மதுபான கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து 4 பேர் கும்பலை தேடி வந்தனர்.

இதனையடுத்து முகப்பேர் பகுதியில் பதுங்கியிருந்த கடத்தல் ரவுடி கும்பல் செல்போன் பறித்த அம்பத்தூர் ஒரகடம் இந்திரா காந்தி தெருவை சேர்ந்த மோசஸ்(24), பெரிய நொளம்பூர் வெள்ளாளர் தெருவை சார்ந்த கௌதம் (21), மேற்கு முகப்பேர்,2வது பிளாக்கை சேர்ந்த பிபின் கிருஷ்ணன் (26),  கள்ளக்குறிச்சியை சேர்ந்த குமார் (26) ஆகிய 4 பேரை பிடித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர் : கன்னியப்பன்

First published:

Tags: Chennai, Crime News, Tasmac