• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னையில் மீண்டும் உருவாகும் கொரோனா கிளஸ்டர்

சென்னையில் மீண்டும் உருவாகும் கொரோனா கிளஸ்டர்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

சென்னை கீழ்பாக்கத்தில் கூழ் ஊத்தும் திருவிழாவில் பங்கேற்ற பலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் வர்தமான் கார்டன் தெருவில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதில் ஒருவரான 47 வயது பெண் மூன்று நாட்களில் உயிரிழந்துவிட்டார்.

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள கோயிலில் கூழ் ஊத்தும் நிகழ்வுக்கு 300 பேர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கூடியுள்ளனர். அப்போது சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல், முகக்கவசம் அணியாமல் இருந்துள்ளனர். அதில் பலர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள். அந்த நிகழ்வுக்கு வந்தவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன.

தகவல் அறிந்த சுகாதாரத்துறை அந்நிகழ்வில் பங்கேற்றவர்கள், அந்தப் பகுதியில் இருப்பவர்கள் என 300க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டனர். அதில் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று உறுதியான நபர்களில் 47 வயது பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று நாட்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சர்க்கரை நோயாளியான அவர் தடுப்பூசி ஒரு டோஸ் கூட செலுத்திக் கொள்ளவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்க எந்த வித மதக் கூட்டங்களையும் பண்டிகைகளையும் கூட்டம் இல்லாமல் தனிமையில் கொண்டாட வேண்டும் என ஓமந்தூரார் மருத்துவமனையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். களத்தில் பணி செய்யும் சுகாதார பணியாளர்கள் மிகவும் அவதிப்படுவதாக கூறிய அவர் முகக்கவசம் சமூக இடைவெளி கடைப்பிடிக்காதவர்களை கடுமையாக சாடினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: