Home /News /tamil-nadu /

பாஜக நிகழ்ச்சி அழைப்பிதழில் சைதை துரைசாமியின் பெயர்..

பாஜக நிகழ்ச்சி அழைப்பிதழில் சைதை துரைசாமியின் பெயர்..

சைதை துரைசாமி

சைதை துரைசாமி

Saidai Duraisamy | பாஜக நடத்தும் நிகழ்ச்சியிலும் கல்வியாளராக மட்டுமே பங்கேற்கிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது?

பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஆற்றிய உரைகள் நூல் தொகுப்பு வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது. நந்தனம் புத்தக காட்சியில் நடைபெறும் விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நூலை வெளியிட முதல் பிரதியை சைதை துரைசாமி பெற்றுக்கொள்ள இருக்கிறார் என்ற அழைப்பிதழ் வெளியாகியுள்ளது. இதுதான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வருடங்களாகவே அதிமுகவில் எந்த முக்கியத்துவமும் இல்லாமல் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்து வருகிறார் மனித நேயம் அறக்கட்டளையின் நிறுவனர், சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி. அதிமுக கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்காத அவர் திடீரென பாஜக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
ஒருவேளை அவர் பாஜக பக்கம் திரும்புவதற்கான சூழலாக இந்த புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியை கையில் எடுத்து இருக்கலாம் என்றும் பரவலாக பேசப்படுகிறது.

Also Read: தேனியில் காங்கிரஸுக்கு அதிர்ச்சி அளித்த திமுக கவுன்சிலர்கள்.. காங்கிரஸ் நகராட்சித் தலைவர் வேட்பாளர் வெளிநடப்பு..

இதுகுறித்து நியூஸ் 18 தமிழ்நாடு சார்பில் சைதை துரைசாமியை தொடர்பு கொண்டு கேட்டோம். அதற்கு பயங்கரமாக கோபப்பட்டு அவர் அளித்த பதில்கள் இதோ உங்கள் பார்வைக்கு“நான் ஒரு கல்வியாளராக பல பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். இலவச ஐஏஎஸ் அகடமி நடத்துவதால் பல கட்சியினரும் பல நிகழ்ச்சிகளிலும் என்னை அழைத்து சிறப்பு விருந்தினராக பேச வைத்திருக்கிறார்கள். அதேபோன்றுதான் தற்போது பாஜக நடத்தும் நிகழ்ச்சியிலும் கல்வியாளராக மட்டுமே பங்கேற்கிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது? ஏன் அரசியல் சாயம் பூசுகிறீர்கள்? ஏன் இப்படி என்னை பற்றிய சர்ச்சைகளை கிளப்புகிறார்கள்?! நேற்றும் இன்றும் என்றும் என்றென்றும் எம்ஜிஆரின் தொண்டனாகவே இருந்து வருகிறேன் இருப்பேன்; இதில் எந்த மாற்றமும் இல்லை.

அழைப்பிதழ்


நான் நினைத்திருந்தால் எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் சென்றிருக்கலாம். குறிப்பாக திமுகவுக்கு சென்றிருக்கலாம் சிவப்புக் கம்பள வரவேற்பு எனக்கு அப்போதே கொடுக்கப்பட்டது. எந்தக் காலகட்டத்திலும் பணத்திற்காக கட்சி மாறும் நிலைப்பாட்டை எடுத்தது இல்லை. நான் ஒரு கொள்கையோடு பயணித்துக் கொண்டிருப்பவன். நான் நினைத்திருந்தால் எத்தனையோ வழிகளில் எப்படி எப்படியோ சம்பாதித்து இருக்கலாம் ஆனால் அதற்கான ஆள் நானில்லை.

Also Read: சென்னை மாநகராட்சி மேயராக போட்டியின்றி தேர்வானார் பிரியா.

இனி வரும் காலங்களிலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு கல்வியாளராக நிகழ்ச்சிகளில் பங்கேற்பேன். வீணாக என்னைப் பற்றிய வதந்திகளை பரப்ப வேண்டாம் நான் யாருக்கும் எதற்கும் பயந்தவன் அல்ல நேர்மையோடு ஒழுக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருப்பவன் என்பது என்னை சார்ந்தவர்களுக்கு நன்கு தெரியும்” என்றார். இதனால் பாஜகவில் சைதை துரைசாமி இணையப் போகிறார் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி கிடைத்திருக்கிறது.
Published by:Ramprasath H
First published:

Tags: ADMK, BJP, Book Fair, Politics

அடுத்த செய்தி